அரசுமதுபான துறையில்பணிபுரிகிற IPS,IASஅதிகாரிகள் மீதுநடவடிக்கைகள் எடுக்கப்படும் அரசு மதுபான ஊழியர்களை ஒருமையில் பேசி மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தப்படுகிறேன் என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற அரசு அதிகாரிகளுக்கான ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பின் பத்திரிக்கையாளர் சந்தித்து பேசினார். அப்போது மதுவிலக்கு மற்றும் ஆயத்திருவை அமைச்சர் விக்னேஷ் கூறுகையில் ரெஸ்ட்ரோபார் என்பது டிஸ்கஷனில் உள்ளது தனியார் மையம் என்பதும் டிஸ்கஷனில் இருந்தது தனியார் மையத்தை விவாதிக்கிறீர்களா என்று கேட்டால் நாங்கள் விவாதித்துக் கொண்டு இருக்கிறோம் நாங்கள் இந்தத் துறையை சரி செய்கின்ற முயற்சியில் இறங்கி உள்ளோம் . மக்கள் வேண்டாம் என்று சொல்லுகின்ற எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது .
டாஸ்மாக் IAS, IPS அதிகாரிகள் நடவடிக்கை
அரசு மதுபான ஊழியர்களை ஒருமையில் பேசி மனம் புண்பட்டிருந்தால் அதற்கு நான் வருத்தப்படுகிறேன் திமுக ஆட்சிக்காலத்தில் டாஸ்மார்க் ஊழலுக்கு தொடர்புடைய (IAS IPS )அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்ற கேள்விக்கு அரசுமதுபான துறையில்பணிபுரிகிற IPS ,IASஅதிகாரிகள் மீதுநடவடிக்கைகள் எடுக்கப்படும். உங்களது கோரிக்கை நிறைவேற்றப்படும் சூசகமாக பதிலளித்த மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வை அமைச்சர் எல்லோருடைய மனதிலும் ஒரு குழந்தைத் தன்மை இருக்கும். எல்லோருடைய மனதிலும் ஒரு ரசிப்புத் தன்மை இருக்கும்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
அப்படி ரசித்தது என் தலைவரை தளபதி என்றுமே எனக்கு தளபதி தான் திரையில் பார்த்து பழகிய முகம் இனி திரையில் வர மாட்டார். என்னால் அறியாமல் வந்ததுதான் அறியாமல் வருவதை விவாத பொருளாக எடுத்துக் கொள்ள வேண்டா.ம் என்ன பிரயோஜனம் உள்ளது. இதைப் பற்றி விவாதிக்க என்று பிரேமலதா விஜயகாந்த் இருக்கு பதிலளித்த மதுவிலக்கு ஆயிரதிருவை அமைச்சர் விக்னேஷ் சி.ஐ.டி.யு (CITU) அமைப்பினர், 4000 மதுபான கடைகளில் சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் தேக்கமடைந்துள்ளதாகக் கூறியுள்ளனர்.
டாஸ்மாக் மதுபான ஊழல் நடவடிக்கை
மேலும், 52 புதிய மதுபான நிறுவனங்களிடம் சரக்குகள் வாங்குவது குறித்த கேள்விக்கு 52 புதிய மதுபான நிறுவனங்களிடம் ஒப்பந்தம் போடுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், அது எனக்கே தெரியாது. மதுபானப் பிரியர்கள் எந்த வகையான சரக்குகளை விரும்புகிறார்களோ, அவற்றையே வழங்க வேண்டிய சூழ்நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இருக்கிறது. அதிக அளவில் வரும் சரக்குகள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று மாதங்களுக்கு மேல் விற்கப்படாத மதுபானங்களை திருப்பி அனுப்பும் நடைமுறை தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
இந்த நிலை கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் ஏற்பட்டதல்ல என்றும், கடந்த ஆட்சி காலங்களில் சில நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட சரக்குகளே தேக்கமடைந்துள்ளது. தமிழ்நாடு அரசின் தற்போதைய முடிவுப்படி, நுகர்வோர் எந்த பொருளை விரும்புகிறார்களோ, அந்தப் பொருளையே விற்பனை செய்யும் அடிப்படையில்தான் டாஸ்மாக் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது. அதற்கேற்பவே, டாஸ்மாக் நிர்வாகத்தின் நடைமுறைகள் மற்றும் செயல்பாடுகள் மாற்றப்பட்டுள்ளது.
அமைச்சர் விக்னேஷ் டாஸ்மாக் அறிவிப்பு
தமிழகத்தில் அரசு விற்பனை செய்யும் மதுபானங்களின் தரத்தை ஆய்வு செய்ய ஆய்வகங்கள் இல்லை என்றும், டாஸ்மாக் கடைகள் எதுவுமே சொந்தக் கட்டிடத்தில் இயங்கவில்லை என்ற கேள்விக்கு சொந்தமாக கடை கட்ட வேண்டுமா? மதுபானங்களில் இருக்க வேண்டிய ஆல்கஹால் அளவு குறித்துக் குறிப்பிட்டதுடன், மதுபானத்தில் 42% அளவிற்கு மேல் ஆல்கஹால் உள்ளதா என்பதைச் பரிசோதித்துத் தரத்தை உறுதி செய்ய அரசிடம் ஆய்வகங்கள் இயங்கி வருகிறது என்று கூறினார்.
Source link
