நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் புகழ்பெற்ற சின்ன ஓங்காளியம்மன் கோயிலில் ஆடி மாதம் முழுவதும் பல்வேறு அலங்காரங்கள் வெள்ளிக்கிழமைகளில் நடைபெறும் ஆடி மாதத்தின் இரண்டாவது வெள்ளிக்கிழமையான இன்று உற்சவர் சிலைக்கு ஸ்ரீ சந்திரகலாதேவி நிலா பிறை அலங்காரம் செய்யப்பட்டது இதில் ஏராளமான பெண்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சாமிக்கு அர்ச்சனை செய்ய வந்த பக்தர்கள் வளையல், தாலி கயிறு, குங்குமம், மஞ்சள் உள்ளிட்ட பொருட்களுடன் கொண்டு வந்து பூஜை செய்தனர் .அம்மனை வழிபட வந்த பக்தர்களுக்கு கூழ், மற்றும் பிரசாதங்களை வழங்கினார்.
