IND vs ZIM 2nd T20 – இந்திய உத்தேச 11 அணி: ஓபனர் இடத்தில் மாற்றம்? சாதிப்பாரா இஷான் கிஷன் – india team predicted playing 11 for 2nd t20i vs zimbabwe team

ஜிம்பாப்வே சென்றுள்ள இந்திய அணி, 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில், முதல் போட்டியில், தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, 126 ரன்கள் இலக்கை, 13.2 ஓவர்களிலேயே துரத்தி அபார வெற்றியைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது டி20 போட்டி, ஜூலை 25ஆம் தேதி, இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு துவங்கவுள்ளது. இப்போட்டிக்கான, இந்திய அணியின் பிளேயிங் 11-ல் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஒரேயொரு மாற்றம்: 2ஆவது போட்டிக்கான இந்திய அணியில், ஒரேயொரு மாற்றம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அபிஷேக் சர்மாவை நீக்கி, பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு கொடுக்க அதிக வாய்ப்புள்ளது. இவர், ஐபிஎல் 2026 சீசனில் தொடர்ச்சியாக அதிரடி காட்டினார். மேலும், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர்தான், தற்போது இந்திய டி20 அணிக் கேப்டனாக இருப்பதால், பிரப்சிம்ரன் சிங்கிற்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.

இந்திய உத்தேச 11 அணி: வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா / பிரப்சிம்ரன் சிங், இஷான் கிஷன், ஷ்ரேயஸ் ஐயர், திலக் வர்மா, ஷிவம் துபே, ரிங்கு சிங், ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.

இஷான் கிஷன் சாதிப்பாரா? இந்திய டி20 அணியில், இதுவரை 10 வீரர்கள் மட்டுமே 1500 ரன்களை எடுத்துள்ளனர். தற்போது, 11ஆவது வீரராக இஷான் கிஷன் இணைய வாய்ப்பு கிடைத்துள்ளது. இஷான் கிஷன், இன்னமும் இரண்டு ரன்களை எடுத்தார், இந்த லிஸ்டில் இணைந்துவிடுவார். இதனால், இரண்டாவது டி20 போட்டியில், இஷான் கிஷன் மீது பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்திய டி20 அணியில், இந்த வருடத்தில், இதுவரை மட்டும் 4 வீரர்கள் அறிமுகம் ஆகியிருக்கிறார்கள். பிரப்சிம்ரன் சிங், 2ஆவது போட்டியில் விளையாடும் பட்சத்தில், 5ஆவது வீரராக இந்த லிஸ்டில் இணைவார்.

இத்தொடர் துவங்குவதற்கு முன், சர்வதேச டி20 தரவரிசையில், இந்திய அணி, 268 புள்ளிகுடன் 2ஆவது இடத்தில் இருந்தது. இங்கிலாந்து அணியும், 268 புள்ளிகளை பெற்றிருந்த நிலையில், முதல் இடத்தில் இருந்தது. தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில், இந்திய அணி அபாரமாக செயல்பட்டு தொடரை கைப்பற்றினால், மீண்டும் முதல் இடத்தை இடிக்க முடியும்.

டி20 தரவரிசையில், ஜிம்பாப்வே அணி, 12ஆவது இடத்தில் இருக்கிறது. இத்தொடரை, ஜிம்பாப்வே அணி கைப்பற்றினால், அயர்லாந்து அணியை பின்னுக்கு தள்ளி, ஜிம்பாப்வே அணியால் 11ஆவது இடத்தை இடிக்க முடியும்.

இந்திய டி20 அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்ற ஷ்ரேயஸ் ஐயர், 8 போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்றுக் கொடுத்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான 2 டி20 போட்டிகளிலும், இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 டி20 போட்டிகளிலும், கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர், ஒரு வெற்றியைக் கூட பெற்றுத்தரவில்லை. தற்போது, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளிலும் அபார வெற்றியைப் பெற்றுக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில், ஷ்ரேயஸ் ஐயர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link