மதுரை: திண்டுக்கல் மாவட்டம், பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான, 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மோசடியாக பத்திரப்பதிவு செய்த விவகாரம் தொடர்பாக, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடக் கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முறையிடப்பட்டது.
நீ திபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் வழக்கறிஞர் மாரீஸ்குமார் ஆஜராகி முறையிட்டதாவது:
பழனி தண்டபாணி சுவாமி மடத்திற்கு சொந்தமான நிலம், மோசடியாக சில தனி நபர்கள் பெயர்களில் பத்திரப்பதிவு செய்யப்பட்டது.
பதிவு செய்த தேதியில் கொடைக்கானல் சார் – பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிய ஜஸ்டின் மணிகண்டன் சுப்ரமணியன், பொறுப்பு சார் – பதிவாளராக செயல்பட்டுள்ளார். போலியாக மோசடி ஆவணங்களை பதிவு செய்தது தொடர்பான இரு வழக்குகளை அவர் ஏற்கனவே எதிர்கொண்டுள்ளார். இச்சூழலில், அவர் பொறுப்பு சார் – பதிவாளராக செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது .
மாநில அரசின் கட்டுப்பாட்டிலுள்ள சி.பி.சி.ஐ.டி., போலீசாரின் விசாரணையில் நம்பிக்கை இல்லை.
வழக் கு விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட கோரி, பழனி தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., வேணுகோபாலு சேனாதிபதி தாக்கல் செய்யும் மனுவை, ஜூலை 27ல் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும். இவ்வாறு தெ ரிவித்தார்.
நீதிபதிகள், ‘மனு தாக்கல் செய்யும் பட்சத்தில் ஜூலை 28ல் விசாரிக்கப்படும்’ என்ற னர்.
