கூடுதல் விலைக்கு மது விற்றால் பணியாளர்கள் 'டிஸ்மிஸ்'

சென்னை: ‘டாஸ்மாக்’ கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்தால், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவர் என, டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

தமிழக அரசின் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் மதுபாட்டில்களுக்கு, அரசு நிர்ணயம் செய்துள்ள விலையை விட கூடுதலாக, 10 – 20 ரூபாய் வரை வசூலிக்கின்றனர்.

இனி, இது போன்ற செயல்களில் ஈடுபடும் பணியாளர்களை நிரந்தர பணிநீக்கம் செய்ய டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதன்படி, பணியாளர்களின் கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பது முதன்முறை கண்டறியப்பட்டால், ஒரு மாதம் பணியிடை நீக்கமும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

இரண்டாவது முறை தவறு செய்தால், மூன்று மாதங்கள் பணியிடை நீக்கமும், 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.

மூன்றாவது முறை தவறு கண்டறியப்பட்டால், தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, விசாரணை நடத்தி குற்றம் உறுதியானால், நிரந்தர பணிநீக்கம் செய்ய டாஸ்மாக் முடிவு செய்துள்ளது.

Source link