நாடு முழுதுவம் நீட் முறைகேடு மற்றும் நீட் வினாத்தாள் கசிவு உள்ளிட்டவைகளுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என்று மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் லட்சகணக்கான மாணவர்கள் போராடத்தில் ஈடுப்பட்டு வரும் நிலையில் , கூட்டத்தை கலைக்க முயன்றனர். இருப்பினும் போராட்டத்தை முன்னெடுத்ததால், மாணவர்கள் மீது தடியடி தாக்குதல் செய்து கைது செய்தனர்.
இந்த நிலையில் மும்பையில் நடந்த போராட்டத்தின் போது காவல்துறையினரின் வாகனத்தை தைரியமாக வழிமறித்து ஒரு இளம்பெண் ஒருவர் நின்றார். அந்த ஒற்றை வீடியோ இணையத்தில் வெளியானது. யார் இந்த தைரியமான பெண்? என்ற கேள்வி இணையத்தில் காட்டுத்தீ போல் பரவியது. இது குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தேட ஆரம்பித்தனர். அவர் வேறு யாருமல்ல ரியா அஹிர்
போலீஸ் வாகனத்தை மறித்த பதற்றமான தருணம்
மும்பையில் நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிலைமையைக் கட்டுப்படுத்த முயன்ற காவல்துறையினர், சில போராட்டக்காரர்களைக் கைது செய்து தங்களின் வாகனத்தில் ஏற்றினர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நடந்தது. கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் சென்ற போலீஸ் வாகனத்தின் முன் அதிரடியாக வந்து நின்றார் ரியா அஹிர். வாகனத்தை செல்லவிடாமல் தடுத்து, “எதற்காக இவர்களைக் கைது செய்கிறீர்கள்? என்று துணிச்சலுடன் அதிகாரிகளை நோக்கி கேள்வி எழுப்பினார். இந்த பதற்றமான தருணம் கேமராவில் பதிவாகி, கணப்பொழுதில் இணையத்தில் வைரலானது.
நீட் மாணவி இல்லை… ஆனால் குரல் கொடுத்தது ஏன்?
ரியா அஹிர் யார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து பல்வேறு தகவல்கள் பரவத் தொடங்கின. இது தொடர்பாக செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ரியா தனது நிலைப்பாட்டைப் பற்றி வெளிப்படையாகப் பேசினார்.
நான் நீட் தேர்வு எழுதிய மாணவி கிடையாது. ஆனால், நியாயத்திற்காகப் போராடும் மாணவர்களுக்காக என் குரலை உயர்த்த வேண்டியது என் கடமை என்று நினைத்தேன். டெல்லியில் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதல் முற்றிலும் தவறானது. அதிகாரிகள் பொறுப்பற்று நடக்கும் போது சாதாரண குடிமக்களாகிய நாம்தான் களத்தில் இறங்கி கேள்வி கேட்க வேண்டும்” என்று அவர் உணர்ச்சிப்பூர்வமாகக் கூறினார்.
மேலும், அந்த சம்பவத்தை தான் முன்கூட்டியே திட்டமிடவில்லை என்றும், அங்கு நடந்த அநீதியைக் கண்டதும் தன்னிச்சையாக எழுந்த உணர்ச்சியால் தான் வாகனத்தை மறித்ததாகவும் அவர் விளக்கமளித்தார்.
இணையத்தில் வெடித்த ஆதரவும் விவாதமும்
ரியா அஹிர் போலீஸ் வாகனத்தை மறிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கோடிக்கணக்கான பார்வைகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. பலரும் அவரது அஞ்சாநெஞ்சத்தையும், மாணவர்களுக்காக நின்ற துணிச்சலையும் பாராட்டி மீம்களையும் பதிவுகளையும் வெளியிட்டு வருகின்றனர்.
அதேவேளையில், சட்ட ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சிலர் இவரது செயலுக்கு எதிரான விவாதங்களையும் முன்வைத்து வருகின்றனர். எது எப்படியோ, இந்த ஒரு சம்பவத்தின் மூலம் நீட் போராட்டத்தின் மிக முக்கியமான, தவிர்க்க முடியாத ஒரு முகமாக ரியா அஹிர் மாறிப்போயுள்ளார் என்பதே நிதர்சனம்.
