தமிழக முதல்வரும் நடிகருமான விஜயின் கடைசி திரைப்படமாக உருவாகியுள்ள ‘ஜன நாயகன்’ ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. ஆனாலும் பல தடைகளை கடந்து வெளியாகியுள்ள இந்த படம் விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருந்தாலும், அவரது கடைசி படம் என்பது பலருக்கும் சோகத்தை கொடுத்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க இங்கே க்ளிக் செய்யவும்:
இதனிடையே படத்தின் முதல்நாள் முதல் காட்சியை, படக்குழுவினர், இசையமைப்பாளர் அனிருத், நடிகை கீர்த்தி சுரேஷ், த்ரிஷா உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்கள் படத்தை கண்டு ரசித்த நிலையில், ஜன நாயகன் படத்தின் சிறப்பு காட்சியை நடிகை த்ரிஷா கிருஷ்ணனும், அவரது தாயார் உமா கிருஷ்ணனும் நேரில் பார்த்தனர். படம் குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமா கிருஷ்ணனின் கருத்து தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், “படத்தை மிகவும் ரசித்துப் பார்த்தோம். எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இது விஜயின் கடைசி திரைப்படம் என்பதால் வருத்தமாக இருக்கிறது. இனிமேல் அவரை திரையில் பார்க்க முடியாது என்பதே மிகவும் உணர்ச்சிகரமாக உள்ளது. நிச்சயம் அவரை மிஸ் பண்ணுவோம்,” என்று அவர் கூறினார்.
நடிகை த்ரிஷாவும் விஜயும் ஏற்கனவே ‘கில்லி’, ‘திருப்பாச்சி’, ‘ஆதி’, ‘குருவி’, ‘லியோ’ உள்ளிட்ட பல வெற்றி திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். மேலும், விஜயின் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் (GOAT)’ படத்திலும் த்ரிஷா சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். திரைப்படங்களைத் தாண்டியும், விஜய் மற்றும் த்ரிஷா குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து வதந்திகள் பரவி வருகின்றன. இருவரும் சமீபத்தில் ஒன்றாக பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது மற்றும் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு த்ரிஷா பகிர்ந்த வாழ்த்து பதிவு ஆகியவை இந்த வதந்திகளுக்கு மேலும் வலு சேர்த்ததாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஜன நாயகன்’ திரைப்படத்தை இயக்குநர் எச். வினோத் இயக்கியுள்ளார். விஜயுடன் இணைந்து பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரியாமணி, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். கே.வி. வெங்கட நாராயணாவின் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம், தணிக்கை தொடர்பான தாமதங்களுக்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு மேலான காத்திருப்பை முடித்து ஜூலை 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
