டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் செல்வதற்கு, ஒவ்வொரு முறையும், ரூ.18.50 கோடி கட்டணம்

டெஹ்ரான்: ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்லும் எண்ணெய் கப்பல் செல்வதற்கு, ஒவ்வொரு முறையும், ரூ.18.50 கோடி கட்டணம் வசூலிக்க ஈரான் முடிவு செய்துள்ளது.

அமெரிக்கா – ஈரான் போர் காரணமாக உலகின் முக்கிய எண்ணெய் வர்த்தக கடல் பாதையான ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளது. இதனால், உலக அளவில் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு, பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஹார்முஸ் ஜலசந்தியை கைப்பற்ற வேண்டும் என்று கூறிய அதிபர் டிரம்ப், இதற்காக ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்த நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியை நிர்வகித்து வரும் ஈரான், உலகளவில் நிலவும் கச்சா எண்ணெய் பற்றாக்குறையை தனக்கு சாதகமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அதாவது, வளைகுடா நாடுகளில் இருந்து எண்ணெய் டேங்கருடன் வரும் சரக்கு கப்பல்கள், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாக பயன்படுத்த, ரூ.18.50 கோடி வரை கட்டணமாக வசூலிக்க ஈரான் பரிசீலித்து வருகிறது.

இது குறித்து ஈரான் எம்பி ஒருவர் கூறுகையில், ‘எரிபொருள் மற்றும் உணவு விநியோகத்திற்காக ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்தும் நாடுகள், ஈரானுக்கு கட்டணத்தை செலுத்த வழிவகை செய்யும் மசோதா பற்றி ஈரான் பார்லி பரிசீலித்து வருகிறது, ‘ எனக் கூறினார்.

வளைகுடா நாடுகளின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உயிர்நாடியாக இருக்கும் ஹார்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த, ஈரான் கட்டணம் வசூலித்தால், உலகளவில் கச்சா எண்ணெய் விலை மேலும் உயரும்.

Source link