சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட்

சென்னை: பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் பெங்களூருவில் தலைமறைவாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் நிர்வாகி மதூர் சத்யா, சமூக வலைதளங்களில் தன்னுடைய கருத்துக்களால் பிரபலமடைந்தார். இவர் ஏஐயுஎப், ஐஎஸ்சியுஎப் ஆகிய அமைப்புகளில் செயல்பட்டு வந்தார். மதூர் சத்யா, தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பல்வேறு பெண்கள் கட்சியின் தலைமைக்கு இமெயில் மூலம் புகார் அளித்தனர்.

இதையடுத்து, மதூர் சத்யாவை கட்சியில் இருந்து நீக்கம் செய்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமை, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தது.இந்த நிலையில், பெங்களூருவில் தலைமறைவாக இருந்த மதூர் சத்யாவை போலீசார் நேற்றிரவு கைது செய்தனர். தொடர்ந்து, அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு விசாரிக்கப்பட இருக்கிறார்.

Source link