சென்னை: கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்

சென்னை: கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வெளியேறினார்.

சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையிலும், திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகளுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை இழுபறியில் உள்ளது. கூட்டணி கட்சிகளை எப்படியாவது தக்க வைக்க திமுக தரப்பில் சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கேட்ட தொகுதிகள் கிடைக்காததால், திமுக கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

கடந்த தேர்தலில் பண்ருட்டி தொகுதியில் போட்டியிட்டு வேல்முருகன் எம்எல்ஏ ஆனார். சட்டசபையில் திமுகவை எதிர்த்தும், ஆதரவாகவும் பேசி வந்தார். எதிர்வரும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளை ஒதுக்குமாறு அவர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அதற்கு திமுக மறுப்பு தெரிவித்த நிலையில் வேல்முருகன் அதிருப்தியில் இருந்து வந்தார்.

இந்த சூழலில், கட்சியின் பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று, திமுகவுடனான கூட்டணியை அவர் முறித்துக் கொண்டார். இதைத் தொடர்ந்து, அவர் தவெக அல்லது அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாக பேச்சுக்கள் அடிபடுகின்றன.

Source link