ஸ்டார்ட்அப் ரேஸில் ஆண்களை பின்னுக்குத் தள்ளிய பெண்கள்: தமிழகம் தொட்ட புதிய மைல்கல்

தொழில்துறை மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறையால் (DPIIT) அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் எண்ணிக்கையில் தமிழ்நாடு 15,000 என்ற முக்கிய இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. மாநிலத்தில் தற்போது மொத்தம் 15,037 அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.

இதில் குறிப்பிடத்தக்க சிறப்பம்சம் என்னவென்றால், நிறுவனர்களின் பாலின அடிப்படையில் பெண்கள் ஆண்களை விடச் சற்றே முன்னிலையில் உள்ளனர்.

பெண்கள் தலைமை தாங்கும் ஸ்டார்ட்அப்கள்: 7,572

ஆண்கள் தலைமை தாங்கும் ஸ்டார்ட்அப்கள்: 7,465

மாநிலத்தின் இந்த சாதனைக்கு பெண் தொழில்முனைவோரின் பங்களிப்பு மிக முக்கிய தூணாக உருவெடுத்துள்ளது.

மாவட்ட வாரியாக ஸ்டார்ட்அப்களின் விவரம் (டாப் 10)

மாநிலத்தின் ஸ்டார்ட்அப் தலைநகராக சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. சென்னை மட்டுமே 5,134 அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களைக் கொண்டு, மொத்த எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமான இடத்தைப் பிடித்துள்ளது.

சென்னை: 5,134

கோயம்புத்தூர்: 2,011

காஞ்சீபுரம்: 1,318

திருவள்ளூர்: 916

செங்கல்பட்டு: 815

மதுரை: 497

திருச்சி: 446

சேலம்: 403

ஈரோடு: 350

கிருஷ்ணகிரி: 239

துறை வாரியான பங்களிப்பு (டாப் 10)

பல்வேறு துறைகளில் ஸ்டார்ட்அப்கள் கால்பதித்து வரும் நிலையில், தகவல் தொழில்நுட்பச் சேவைத் துறை (IT Services) முதலிடத்தில் உள்ளது.

தகவல் தொழில்நுட்ப சேவைகள் (IT Services): 2,002

ஹெல்த் கேர் –  லைஃப் சயின்சஸ் (Healthcare – Lifesciences): 1,285

வேளாண்மை (Agriculture): 928

உணவு மற்றும் பானங்கள் (Food – Beverages): 846

கல்வி (Education): 795

கட்டுமானத் துறை (Construction): 652

தொழில்முறை மற்றும் வணிக சேவைகள் (Professional – Commercial Services): 614

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence): 584

தொழில்நுட்ப வன்பொருள் (Technology Hardware): 543

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable Energy): 495

தமிழ்நாட்டின் இந்த அபரிமிதமான வளர்ச்சி, மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதோடு, புதுமை மற்றும் தொழில்முனைவில் தமிழ்நாடு முன்னணியில் இருப்பதை மீண்டுமொருமுறை உறுதி செய்துள்ளது.

Source link