ஒரே பயணத்தில் தாய்லாந்து, மலேசியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய மூன்று ஆசிய நாடுகளையும் சுற்றிப் பார்க்க ஆசையா? உங்களுக்காகவே இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி ’பெஸ்ட் ஆஃப் ஏசியன் – த்ரீ இன் ஒன் ‘ (Best of Asia – Three in One) டூர் பேக்கேஜ் என்ற சிறந்த தேர்வை வழங்குகிறது. ஐ.ஆர்.சி.டி.சி போபால் மண்டல அலுவலகத்தால் தொடங்கப்பட்டுள்ள இந்த 11 இரவுகள் மற்றும் 12 நாட்கள் கொண்ட முழுமையான சுற்றுலாப் பயணம் ஆகஸ்ட் 10 அன்று இந்தூர் விமான நிலையத்திலிருந்து தொடங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் பாங்காக், பட்டாயா, கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் ஆகிய புகழ்பெற்ற இடங்களை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.
இனி ஜாலியோ ஜிம்கானா தான்: நண்பர்களை துபாய்க்கு கூப்பிடுங்க… ரூ.79,000 அள்ளுங்க; அரசின் மாஸ் சலுகை
என்னென்ன வசதிகள் கிடைக்கும்?
இந்த பேக்கேஜில் உங்களது பயணத்திற்குத் தேவையான விமானக் கட்டணம் மற்றும் உள்ளூர் போக்குவரத்து போன்ற அனைத்து முக்கிய வசதிகளும் அடங்கும்.
3 ஸ்டார் அல்லது அதற்கு இணையான ஹோட்டல் வசதி (பட்டாயா மற்றும் பாங்காக்கில் தலா 2 இரவுகள்; கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூரில் தலா 3 இரவுகள் தங்குமிடம்).
காலை, மதியம் மற்றும் இரவு உணவு.
சுற்றுலாத் தலங்களைப் பார்ப்பதற்கான அனுமதி, பயணக் காப்பீடு வழிகாட்டி வசதி மற்றும் தேவையான பயண நடைமுறைகள்.
எந்தெந்த இடங்களைச் சுற்றிப் பார்க்கலாம்?
பட்டாயா : கோரல் தீவு (Coral Island) மற்றும் ஜெம்ஸ் கேலரி (Gems Gallery).
பாங்காக் : கோல்டன் புத்தா, மார்பிள் டெம்பிள், ரெக்லைனிங் புத்தா கோவில், சஃபாரி வேர்ல்ட், மரைன் பார்க், சாவோ பிராயா நதி குரூஸ் (Chao Phraya Cruise) மற்றும் இந்திரா மார்க்கெட்டில் ஷாப்பிங்.
மலேசியா : பத்து மலை குகை , புத்ராஜாயா, கோலாலம்பூர் நகர சுற்றுலா, கெந்திங் ஹைலேண்ட்ஸ் (Genting Highlands), கேபிள் கார் பயணம் மற்றும் பெட்ரோனாஸ் இரட்டை கோபுரங்களின் ஸ்கை பிரிட்ஜ்.
சிங்கப்பூர் : சிங்கப்பூர் ஃபிளையர், நைட் சஃபாரி, செந்தோசா தீவு (Sentosa Island), கேபிள் கார், மேடம் டுசாட்ஸ் மெழுகு அருங்காட்சியகம் (Madame Tussauds) மற்றும் ‘விங்ஸ் ஆஃப் டைம்’ லேசர் காட்சி.
பயணக் கட்டணம் எவ்வளவு?
இரட்டை / மூன்று நபர் பகிர்வு (Double & Triple Occupancy): ஒரு நபருக்கு ரூ.1,79,900.
தனி நபர் தங்குமிடம் (Single Occupancy): ஒரு நபருக்கு ரூ.2,17,100.
2 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்குத் தனித்தனிக் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
விசா மற்றும் பாஸ்போர்ட் விவரங்கள்
இந்தியாவில் மீண்டும் தரையிறங்கும் தேதியிலிருந்து குறைந்தபட்சம் 6 மாதங்கள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் இருப்பது அவசியம்.
சிங்கப்பூர் விசா கட்டணம் மற்றும் செயலாக்கம் இந்த பேக்கேஜிலேயே அடங்கும்.
மலேசியா மற்றும் தாய்லாந்திற்கான பயண நடைமுறைகள் நிலவும் விதிகளின்படி பூர்த்தி செய்யப்படும்.
