அரசியல் துறவறம் அறிவித்தார் பாமக ராமதாஸ்

சென்னை: இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன் என 88வது பிறந்தநாளில் பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்தார்.

விழுப்புரம் தைலாபுரம் இல்லத்திலிருந்து பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர் ஒரே காரில், திண்டிவனம் அடுத்த கோனேரிக்குப்பம் பகுதியில் உள்ள சரஸ்வதி கல்லூரியில் நடைபெறும் பிறந்தநாள் நிகழ்ச்சிக்குச் சென்றனர். பிறந்த நாள் நிகழ்ச்சியில் ராமதாஸ் பேசியதாவது:

எனது 88வது பிறந்தநாளான இன்று முதல் அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன். அரசியல் பேசமாட்டேன், அரசியலில் தலையிட மாட்டேன். பா.ம.க.வை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

Source link