சென்னை:
சட்டசபை தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணியில் 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 39 தொகுதிகள் கொண்ட விருப்ப தொகுதி பட்டியலை காங்கிரஸ் அளித்துள்ளது.
தி.மு.க., கூட்டணியில், காங்கிரசுக்கு 28 தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா எம்.பி.,யும் வழங்கப்பட்டது. காங்கிரசுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என இன்னும் அடையாளம் காணப்படவில்லை. தி.மு.க., கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 28 தொகுதிகளில், எந்தெந்த தொகுதிகளை கேட்பது என்பது குறித்தும், யாருக்கெல்லாம் ‘சீட்’ வழங்குவது என்பது குறித்தும் ஆலோசிக்க, தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம், சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது. பிறகு 39 தொகுதிகள் கொண்ட விருப்ப தொகுதி பட்டியலை திமுக தலைமையிடம் காங்கிரஸ் அளித்துள்ளது. காங்கிரசின் விருப்ப தொகுதி பட்டியல் பின்வருமாறு:
1. கிள்ளியூர்,
2. குளச்சல்,
3.விளவங்கோடு,
4.பத்மநாதபுரம்,
5.திருவைகுண்டம்,
6. விருதுநகர்
7. ஆலங்குளம்
8. தென்காசி
9.காரைக்குடி
10.திருவாடானை
11.ராமநாதபுரம்
12.முதுகளத்தூர்
13.நாங்குநேரி
14. திருநெல்வேலி
15. ஊத்தங்கரை
16. மணப்பாறை
17.முசிறி
18. சோளிங்கர்
19.அம்பத்தூர்
20. ஸ்ரீபெரும்புதூர்
21. பொன்னேரி
22. மயிலாடுதுறை
23. கடலூர்
24. கும்பகோணம்
25.சிதம்பரம்
26. வேடசந்தூர்
27. மொடக்குறிச்சி
28. மதுரை மத்தி
29. திருப்பூர் மேற்கு
30.கோவை தெற்கு
31. மதுராந்தகம்
32.கலசப்பாக்கம்
33.அரந்தாங்கி
34.புதுக்கோட்டை
35. மேட்டூர்
36. வேளச்சேரி
37. ஊட்டி
38. சிவகாசி
39. விருத்தாச்சலம்
காங்கிரசுக்கு, தற்போது 17 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். அவர்களுக்கான தொகுதிகளில், ஐந்து முதல் ஏழு வரை மாற்றப்பட உள்ளன. காங்., எம்.எல்.ஏ.,க்களின் தொகுதிகள் சிலவற்றை, தி.மு.க.,விடம் கூட்டணி கட்சிகள் கேட்டு வருகின்றன. அதனால், அவற்றை காங்கிரஸ் தக்க வைக்குமா அல்லது தாரைவார்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
