ஆண்களுக்கு முடி உதிர்வது என்பது இயல்பான வயோதிக மாற்றம் என்று பல நாடுகள் கருதினாலும், அது ஒருவரது தன்னம்பிக்கையையும் தோற்றத்தையும் பெரிய அளவில் பாதிக்கவே செய்கிறது. உலகின் சில நாடுகளில் ஆண்களுக்கு முடி உதிர்வு மிகக் குறைவாக இருந்தாலும், சில நாடுகளில் பெரும்பாலான ஆண்கள் வழுக்கைப் பிரச்சினையால் பாதிக்கப்படுகின்றனர். சமீபத்தில் ‘Medihair’ நிறுவனம் நடத்திய ஆய்வில், உலகிலேயே அதிக அளவில் வழுக்கை தலை கொண்ட ஆண்கள் வாழும் நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் காலூன்றும் என்.ஆர்.காங்கிரஸ்: ரங்கசாமி உடன் முன்னாள் எம்.எல்.ஏ. அருள் சந்திப்பு
ஸ்பெயின் – 44.5%
உலகிலேயே அதிக வழுக்கை தலை கொண்ட ஆண்கள் வாழும் நாடாக ஸ்பெயின் முதலிடத்தில் உள்ளது. அங்குள்ள ஆண்களில் 44.5% பேர் முடி உதிர்வால் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரும்பாலான ஆண்கள் 40 முதல் 45 வயதை எட்டும்போது இந்நிலையை அடைகின்றனர். இருப்பினும், உலகளவில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்துகொள்வதில் ஸ்பெயின் முன்னணியில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்தாலி – 44.37%
இரண்டாம் இடத்தில் உள்ள இத்தாலியில் 44.37% ஆண்கள் வழுக்கையோடு வாழ்கின்றனர். இத்தாலிய கலாச்சாரத்தில் ஆண்களின் வழுக்கை என்பது முதிர்ச்சி மற்றும் ஞானத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகிறது.
பிரான்ஸ் – 44.25%
மூன்றாம் இடத்தில் உள்ள பிரான்ஸில் 44.25% ஆண்கள் வழுக்கைப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர். அதிர்ச்சியளிக்கும் விதமாக, கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பாதி மக்களாக இருந்த முடி உதிர்வு பிரச்சினை, தற்போது பிரான்ஸ் மக்கள் தொகையில் 75% க்கும் மேல் உயர்ந்துள்ளது.
அமெரிக்கா – 42.68%
மரபணு மற்றும் தவறான வாழ்வியல் முறைகள் காரணமாக அமெரிக்கா 4-வது இடத்தில் உள்ளது. அங்குள்ள ஆண்களில் 42.68% பேர் வழுக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அங்கு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தும் ‘மினாக்ஸிடில்’ (Minoxidil) மருந்துகளின் பயன்பாடு பெருமளவில் அதிகரித்துள்ளது.
ஜெர்மனி – 41.51%
டாப் 5 பட்டியலில் கடைசி இடத்தில் உள்ள ஜெர்மனியில் 41.51% வயது வந்த ஆண்கள் வழுக்கையோடு உள்ளனர். இங்கு சுவாரஸ்யமாக 18 முதல் 40 வயதுக்குட்பட்ட இளைஞர்களே அதிக அளவில் முடி உதிர்வைச் சந்திக்கின்றனர்.
இந்தியா – 34.06%
இந்தியா 34.06% வழுக்கை விகிதத்துடன் பட்டியலில் 29-வது இடத்தில் உள்ளது. பாகிஸ்தானை விட இந்தியா இதில் சற்று முன்னணியில் உள்ளது. இந்தியாவில் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தீவிரமான முடி உதிர்வுப் பிரச்சினையை எதிர்கொள்வதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
