புதுடில்லி:'' இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அனுபவம்

புதுடில்லி:” இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன,” என ராஜ்யசபாவில் பிரதமர் மோடி குற்றம் சாட்டினார்.

ராஜ்யசபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பதிலளித்து பிரதமர் மோடி பேசியதாவது:

முன்னேறும் இந்தியா

பாரத தேசத்தில் இருக்கும் அனைத்து தரப்பினரின் வளர்ச்சியையும் இந்த அரசு உறுதி செய்துள்ளது. தேச நலன், அடித்தட்டு மக்களின் வளர்ச்சிக்கான அறிவிப்புகள் ஜனாதிபதி உரையில் உள்ளன. பெண்கள், விவசாயிகள், மீனவர் நலனுக்காக பலதிட்டங்களை அறிவித்துள்ளோம்.இந்த நூற்றாண்டின 2வது காலாண்டு இந்தியாவுக்கு சொந்தமானது.

உலக நாடுகளில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அதே வேளையில், இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. உலக நாடுகளின் பிரச்னைகளை தீர்க்கும் வலிமை மிக்க நாடாக இந்தியா திகழ்கிறது. பொருளாதார நெருக்கடியை வென்று இந்தியா முன்னேறுகிறது.

மக்கள் நலனில் பாஜ அக்கறை செலுத்துவதால் தான் 3வது முறை ஆட்சி அமைத்துள்ளது.பெரிய பொருளாதார நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவின் முன்னேற்றம் சிறப்பானதாக இருக்கிறது.

உலக பொருளாதாரத்தில் 2011ல் 11வது இடத்தில் இருந்தோம். இன்று 3வது இடத்தில் இருக்கிறோம். 2வது உலகப்போருக்கு பிறகு உலக நாடுகளின் வளர்ச்சியில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

புதிய அத்தியாயம்

பொருளாதார சக்திவாய்ந்த நாடாக இந்தியா திகழ்கிறது. சர்வதேச ஒத்துழைப்பில் இந்தியா புதிய அத்தியாயத்தை படைத்து வருகிறது. வருங்காலத்தை கருத்தில் கொண்டு வர்த்தக ஒப்பந்தத்தில் புரட்சி ஏற்படுத்தி வருகிறோம். உலக நாடுகள் மத்தியில் இந்தியா முக்கியத்துவம் பெறுகிறது. உலகின் வளர்ச்சியில் தவிர்க்க முடியாதஇடத்தில் இந்தியா உள்ளது.நான் குஜராத் முதல்வராக இருந்த போது ஜப்பானை போட்டியாக நினைத்தோம். அந்நாட்டுடன் ஒப்பந்தம் போட்டோம்.

ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபடுபவர்கள் நாட்டின் வளர்ச்சியை சிந்திக்க மாட்டார்கள். எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகளை சரி செய்வதிலேயே நேரம் போகிறது. எதிர்க்கட்சிகள் பதில் சொல்லியாக வேண்டும். ஓடிவிடக்கூடாது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களை விட வேகமாக செயல்படுகிறேன். காங்கிரஸ் கட்சிக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. அனைத்து துறைகளிலும் இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளது. சிறுகுறு தொழில் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை செய்துள்ளோம். எனது ஆட்சியில் நாட்டின் வளர்ச்சி கண்கூடாக தெரிகிறது.

பெரிய நாடுகள் ஆர்வம்

பெரிய நாடுகள் எல்லாம் இந்தியா உடன் வர்த்தக ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளன.ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா உடன் இந்தியா செய்த ஒப்பந்தங்களை உலக நாடுகள் வரவேற்றுள்ளன. இந்தியா செய்த ஒப்பந்தத்தால் இளைஞர்கள் பயன் அடைவார்கள். இன்னும் பல நாடுகளுடன் விரைவில் ஒப்பந்தம் போடப்பட உள்ளது. உலகளவில் இந்திய இளைஞர்களின் திறனுக்கான தேவை அதிகரித்து வருகிறது.

இத்தனை ஆண்டுகள் அனுபவம் இருந்தும் எதிர்க்கட்சிகள் தரம் தாழ்ந்து செயல்படுகின்றன. இந்திய வளர்ச்சியை பாராட்ட மனமின்றி எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளன. ஊடுருவல்காரர்களை எதிர்க்கட்சிகள் பாதகாக்கின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

வெளிநடப்பு

பிரதமர் மோடி உரையை துவங்கியதும் எதிர்க்கட்சி எம்பிக்கள் கோஷம் போட்டனர். ராகுலை பேச அனுமதிக்க வேண்டும் என்றனர். அவர்களை அமைதி காக்கும்படி பிரதமர் கூறினார். இருப்பினும் கோஷம் போட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் பிறகு வெளிநடப்பு செய்தனர்.

Source link