அபிஷேக் ஷர்மா, சூர்யவன்ஷி ஏமாற்றம்; 2வது டி20 போட்டியில் இந்தியா சொதப்பல்

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்து வருகிறது.

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் ஷர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே 8 ரன் எடுத்திருந்த அபிஷேக் ஷர்மா அவுட்டானார். இதற்கு அடுத்த ஓவரிலேயே சூர்யவன்ஷியும் (20) ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், 29 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது.

தொடர்ந்து, இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர்.

Source link