அபிஷேக் , பிரின்ஷ் அசத்தல் பவுலிங்; 90 ரன் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி

ஹராரே : ஜிம்பாப்வேக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 90 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம், கேப்டன் ஸ்ரேயாஷ் தலைமையில் இந்திய அணி முதல் டி20 தொடரை கைப்பற்றியுள்ளது.

ஜிம்பாப்வேவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில், இரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடைபெற்றது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணிக்கு சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் ஷர்மா துவக்க வீரர்களாக களமிறங்கினர். ஆட்டத்தின் 2வது ஓவரிலேயே 8 ரன் எடுத்திருந்த அபிஷேக் ஷர்மா அவுட்டானார். இதற்கு அடுத்த ஓவரிலேயே சூர்யவன்ஷியும் (20) ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். இதனால், 29 ரன்னுக்கே 2 விக்கெட்டை இழந்து இந்திய அணி தடுமாறியது.

தொடர்ந்து, இஷான் கிஷான் மற்றும் ஸ்ரேயாஷ் ஐயர் ஜோடி சேர்ந்தனர். இருவரும் இணைந்து 64 ரன்களை சேர்த்த நிலையில், கேப்டன் ஸ்ரேயாஷ் ஐயர் (25) பென்னட் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அதன்பிறகு, இஷானுடன் துணை கேப்டன் திலக் வர்மா இணைந்தார். இருவரும் ஜிம்பாப்வே பவுலிங்கை சின்னாபின்னமாக்கினர். 31 பந்தில் அரைசதம் இடித்த இஷான் கிஷான், தனது 12வது டி20 அரைசதத்தை பதிவு செய்தார்.

மறுமுனையில் திலக் வர்மாவும் தனது பங்கிற்கு சிக்சர், பவுண்டரிகளை விளாசினார். சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷான், 81 ரன்னில் அவுட்டானார். மறுமனையில் அதிரடியாக ஆடி அரைதசம் அடித்த திலக் வர்மா, 29 பந்தில் 60 ரன் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதன்மூலம், இந்திய அணி 20 ஓவர் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன் குவித்தது.

220 ரன் என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு அதிரடியான துவக்கம் கிடைத்தாலும், பேட்டர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தது. பென்னட் (32), பர்ல் (20), எவான்ஸ் (19) ஆகியோர் மட்டுமே ஓரளவுக்கு ரன் குவித்தனர். இதனால், அந்த அணி 125 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், இந்திய அணி 94 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந்திய அணி தரப்பில் அபிஷேக் ஷர்மா 3 விக்கெட்டும், அறிமுக வீரர் யாஷ் தாகூர் மற்றும் பிரின்ஷ் யாதவ் தலா 2 விக்கெட்டுகளையும், ரவி பிஷ்னோய், ஷிவம் துபே, திலக் வர்மா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

முதல் சீரியஸ்

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை கைப்பற்றியதன் மூலம், ஸ்ரேயாஷ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்று முதல் தொடரை வென்றுள்ளார். இதற்கு முன்னதாக இந்திய அணி, அயர்லாந்து மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரை இழந்தது.

Source link