மம்தா வெளியிட்ட திரிணமூல் காங். வாக்குறுதிகள்

கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட அக்கட்சியின் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி, மாநிலத்தில் அறிவிக்கப்படாத குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார்.

தமிழ்​நாடு, மேற்கு வங்​கம், அசாம், புதுச்​சேரி, கேரளா ஆகிய 5 மாநிலங்​களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதியை தேர்​தல் ஆணை​யம் கடந்த 15-ம் தேதி அறிவித்தது. அதன்படி, மேற்கு வங்கத்தில் மொத்தம் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக 152 தொகுதிகளுக்கு ஏப்ரல் 23-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இரண்டாம் கட்டமாக 142 தொகுதிகளுக்கு ஏப்ரல் 29-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.

தேர்தலை முன்னிட்டு, ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டது. கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அதில், லக்‌ஷ்மிர் பந்தர் திட்டத்தின் கீழ் மகளிருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகையில் ரூ.500 உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1,500, மற்றும் எஸ்சி, எஸ்டி பெண்களுக்கு மாதம் ரூ.1,700 வழங்கப்பட்டு வருகிறது.

Source link