கோவை கோனியம்மன் கோவில் வளாகத்தில் 9 இடங்களில் நிரந்தர உண்டியல் இருக்கிறது. திருப்பணிக்கு பக்தர்களிடம் நன்கொடை வசூலிக்கும் விதமாக 1 உண்டியல் உள்ளது. தேர்த்திருவிழாவை ஒட்டி, 6 இடங்களில் தற்காலிக உண்டியல் வைக்கப்பட்டது. மொத்தமுள்ள 16 உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கையை எண்ணும் பணி, அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் கடந்த 15-ம் தேதி காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை நடந்தது.
த.வெ.க -வின் அடுத்த அதிரடி: டாஸ்மாக் பார் டெண்டருக்கு புது ரூல்ஸ்; இதுதான் மெயின்
ஒரு உண்டியலில் உள்ள காணிக்கை பணத்தை எடுக்காமல், ஏற்கனவே எண்ணப்பட்ட உண்டியல்களோடு சேர்த்து மறைத்து வைத்திருக்கின்றனர். இதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. பிறகு சீட்டு விற்பனையாளர் பாலசுப்ரமணியன், அலுவலக உதவியாளர் சரவணன், திருவலகு பிரதீப்குமார், பூசாரி கிருஷ்ணராஜ் ஆகியோர் கூட்டு சேர்ந்து ஒரு உண்டியலை மறைத்து வைத்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் ரமேஷ் குமார் நடத்திய விசாரணையில் ஊழியர்கள் 4 பேர் உண்டியல் பணத்தை திருடியது உறுதியானதால், போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. தற்போது கோவில் உண்டியலை திருடிய ஊழியர்கள் 4 பேர் மற்றும் அதை கண்டுபிடிக்காத 4 அதிகாரிகள் என மொத்தம் 8 பேர் சஸ்பெண்ட் செய்து அமைச்சர் ரமேஷ் உத்தரவிட்டார்.
திருட்டில் ஈடுபட்டவர்கள் விவரம்
பாலசுப்ரமணியன் (சீட்டு விற்பனையாளர்)
சரவணன் (அலுவலக உதவியாளர்)
பிரதிப்குமார் (திருவலகு)
கிருஷ்ணராஜ் (பூசாரி)
அதிகாரிகள்
ராம்குமார் (சரக ஆய்வாளர்)
உதயகுமார் (சரக ஆய்வாளர்)
குமார் (செயல் அலுவலர்)
உஷா நந்தினி (உதவி ஆணையர்)
