காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களை வாங்குங்கள்; 'மன் கி பாத்' உரையில் பிரதமர் மோடி வேண்டுகோள்

புதுடில்லி: வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன் என மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில் குறிப்பிட்டார்.

அவர் பேசியதாவது: நமது வாழ்வில் சில முக்கிய நாட்கள் உள்ளன, அவற்றை நினைவுகூர நாம் நாட்காட்டியைப் பார்க்கத் தேவையில்லை. இன்று, ஜூலை 26, அத்தகைய ஒரு நாள். இன்று ‘கார்கில் வெற்றி தினம்’. இந்த நாள் நம்மைப் பெருமிதத்தால் நிரப்புகிறது. இந்த நாள், வீரமிக்க படைவீரர்களின் துணிச்சலை நமக்கு நினைவூட்டுகிறது. இன்று, அனைத்து வீரமரணமடைந்த தியாகிகளுக்கும் மரியாதை செலுத்துகிறேன்.

உள்நாட்டிலேயே…

சில நாட்களுக்கு முன்பு, ஐஎன்எஸ் மகேந்திரகிரி இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது. இந்த நவீன போர்க்கப்பல் இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது. இதன் 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை. இது தற்சார்பு இந்தியாவின் வளர்ந்து வரும் வலிமையைப் பிரதிபலிக்கிறது. டி.ஆர்.டி.ஓ குஷா ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை நடத்தி உள்ளது. இத்தகைய முன்னேற்றங்கள் பாதுகாப்புத் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கிறது.

புதிய உயரங்கள்

இன்று பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி, ஏற்றுமதி என எதுவாக இருந்தாலும், இந்தியா தொடர்ந்து புதிய உயரங்களை எட்டி வருகிறது. இந்த மாத தொடக்கத்தில் நான் இந்தோனேசியாவில் இருந்தபோது, ​​பிரம்மோஸ் மற்றும் அஸ்த்ரா ஏவுகணைகளுக்கான ஒரு முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் தொழில்நுட்பத்தின் மீதான உலகின் நம்பிக்கை அதிகரித்து வருகிறது. விளையாட்டுத் துறையில் இந்திய விளையாட்டு வீரர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. நாட்டின் இளைஞர்கள் உலக அரங்கில் தங்கள் செயல்பாடுகள் மூலம் அளவற்ற பெருமையை ஈட்டி வருகின்றனர்.

மைல்கல்

ஜப்பான் ஓபன் பேட்மிண்டனில் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்ற பி.வி. சிந்துவின் சாதனையால் ஒட்டுமொத்த தேசமும் பெருமிதம் கொள்கிறது. லண்டனில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஒரு மைல்கல் தருணம். விக்ரம் -1 ராக்கெட்டின் வெற்றிகரமான ஏவுதல் நாட்டின் ஒவ்வொரு இந்தியர்களையும் பெருமிதம் கொள்ள செய்தது. இந்திய விண்வெளித் துறையின் இந்த வரலாற்றுத் தருணத்தை நாம் அனைவரும் கண்டோம்.

சிறப்பான செயல்பாடு

இது தனியார் துறையால் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் ராக்கெட் ஆகும். நமது இளம் கண்டுபிடிப்பாளர்கள் கற்பனை செய்ய முடியாததைச் சாதித்துள்ளனர். அவர்கள் அபாரமான திறமை, ஆர்வம் மற்றும் பொறுமையை வெளிப்படுத்தினர். பல்வேறு சர்வதேச அறிவியல் ஒலிம்பியாட்களில் இந்தியாவின் சிறப்பான செயல்பாடு பாராட்டத்தக்கது. இயற்பியல் ஒலிம்பியாடில் நமது ஐந்து மாணவர்களும் தங்கப் பதக்கங்களை வென்றதோடு, இந்தியா முதலிடத்தையும் பிடித்தது. இயற்பியல் ஒலிம்பியாட்டில் நம் மாணவர்கள் 5 பேரும், வேதியியல் ஒலிம்பியாட்டில் 4 பேரும் தங்கம் வென்றனர்.

வேண்டுகோள்

உயிரியல் ஒலிம்பியாட்டில் ஒருவரும், கணித ஒலிம்பியாட்டில் இருவரும் தங்கப்பதக்கம் வென்றது பெருமிதம் அளிக்கிறது. கடந்த 12 ஆண்டில் காதி பொருட்களின் விற்பனை 6 மடங்கு அதிகரிப்பு; விற்பனை மதிப்பு ரூ.8 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளது. வரும் பண்டிகை சீசனில், காதி, கைத்தறி, கைவினைப்பொருட்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயம் வாங்கும்படி வேண்டுகோள் விடுக்கிறேன்.

நாம் உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம் என்ற உணர்வுக்கு குரல் கொடுப்போம் என்ற உணர்வுக்கு மேலும் வலு சேர்ப்போம் வாருங்கள். இன்று தேசத்திலே எந்த வகையில் கைத்தறிக்கு ஊக்கமளிக்கப்பட்டு வருகிறதோ, இதன் காரணமாக அதிக அளவிலே மக்களின் வாழ்க்கை சிறப்பானதாக ஆகிக் கொண்டிருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

மன் கி பாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link