மேகதாது அணை கட்ட ஒரு செங்கலை கூட எடுத்து வைக்க முடியாது; அமைச்சர் செங்கோட்டையன்

ஈரோடு: ”தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை, மேகதாது அணை கட்ட முடியாது; தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை, மேகதாது அணை கட்ட முடியாது” என்று அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஈரோட்டில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது: காவிரி விவகாரத்தில் தமிழக பிரதிநிதிகள் கர்நாடகா செல்வது வழக்கமான ஒன்று தான். அதிமுக ஆட்சியில் ஓபிஎஸ், சிவி சண்முகம் கர்நாடகா சென்றனர்.

மேகதாது அணை விவகாரத்தில் 100 சதவீதம் பின்னடைவாக இருக்கிறது. தமிழக முதல்வராக விஜய் இருக்கும் வரை, ஒரு செங்கல்லை கூட எடுத்து வைக்க முடியாது.

மேகதாது அணை கட்ட முடியாது. அது தான் முதல்வரின் கனவு. எந்த பகுதியில் எல்லாம் குடிநீர் பற்றாக்குறை இருக்கிறது என்று எல்லாம் ஆய்வு செய்து கொண்டு இருக்கிறோம். நிலத்தடி நீர் இருக்கும் இடத்தை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

குடிநீர் மற்றும் கால்நடைகளுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதற்கு இந்த அரசு முயற்சிகள் மேற்கொண்டு இருப்பது மட்டுமல்ல, வெற்றிகரமாக கிடைக்க ஏற்பாடு செய்யும். இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!

அமைச்சர் செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு

Source link