முன்னாள் நடிகரும் தற்போதைய முதலமைச்சருமான விஜய் நடிப்பில், எச்.வினோத் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் கே.வி.என் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘ஜனநாயகன்’. இப்படம் ஜூலை 23-ஆம் தேதி உலகம் முழுவதும் சுமார் 3,000 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியானது. தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 950 திரையரங்குகளுக்கு மேல் படம் திரையிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தங்கத்தை சாக்கடையில் கொட்டும் ஒரே நாடு… எங்க பாத்தாலும் கோல்டு, வெள்ளியா தான் கொட்டி கிடக்கும்; உடனே ஓடுங்க
அரசியலில் பிஸியாக உள்ள முதலமைச்சர் விஜய்யின் கடைசித் திரைப்படம் இது என்பதால், ரசிகர்களும், தொண்டர்களும் படத்தை கொண்டாடி வருகின்றனர். ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீட்டை ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடினர். விஜய் பேனருக்கு பால் அபிஷேகம், பன்னீர் அபிஷேகம் என பல அபிஷேகங்களை செய்து கொண்டாடினர்.
சிலர் படம் வெற்றி பெற வேண்டும் என கோயில்களில் மண் சோறு சாப்பிட்டனர். இப்படி தளபதி வெறியர்கள் தங்கள் தலைவரின் கடைசி படத்தை ஆரவாரமாக கொண்டாடினர். இந்நிலையில், ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியான 3 நாட்களில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. வெளியான முதல் நாளே இந்த படம், இந்தியாவில் மட்டும் ரூ. 42.7 கோடி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து, இரண்டாம் நாளில் 21.15 கோடி ரூபாயும், மூன்றாம் நாளில் ரூ.28.50 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிகிறது. உலகளவில் ‘ஜன நாயகன்’ திரைப்படம் 3 நாட்களில் ரூ.171.84 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ரூ. 100 கோடி கிளப்பில் இணைந்தது
இந்திய பாக்ஸ் ஆபீஸில் ‘ஜன நாயகன்’ தனது அதிரடி வசூல் பயணத்தைத் தொடர்ந்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமை மதியம் 1 மணி நிலவரப்படி இந்த படம் ரூ. 9.05 கோடி வசூலித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
கேரளா பாக்ஸ் ஆபீஸில் அசத்தல்
கேரளா பாக்ஸ் ஆபிஸ் தகவல்படி, ‘ஜன நாயகன்’ திரைப்படம் வெளியான முதல் 3 நாட்களில் ரூ. 10.1 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
