ஹராரே: ஜிம்பாப்வேவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் இருபோட்டிகளில் வெற்றி பெற்ற இந்திய அணி, ஏற்கனவே தொடரை வென்று விட்டது. இந்த நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஹராரேவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி ஏற்கனவே தொடரை வென்று விட்டதால், சம்பிரதாய போட்டியாக நடக்கும் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பிரின்ஷ் யாதவ், ஷிவம் துபேவுக்கு பதிலாக அசோக் ஷர்மா மற்றும் சூர்யான்ஷ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
