வருகைப் பதிவேட்டில் ஒரு எண், மதிப்பெண் பட்டியலின் ரேங்க், தரவுத்தளத்தில் சேமிக்கப்பட்டுள்ள கைரேகை பதிவு, சிறப்பு தீவிர சீரமைப்புப் படிவத்தின் பொடி எழுத்துக்கள்… இந்நாட்டின் கட்டமைப்பு உங்களை ஒரு கரப்பான் பூச்சியைப் போலத்தான் உணர வைக்கிறது. 1.25 பில்லியன் மக்களில் ஒருவராக வாழ்வதற்காகவும் தப்பி பிழைப்பதற்காகவும் ஊர்ந்து திரியும் உயிராகவே இக்கட்டமைப்பு நம்மை நடத்துகிறது. ஆனால், அதே 1.25 பில்லியனில் ஒருவனாக மாறும் நாள் ஒன்று வருகிறது.
கடந்த சனிக்கிழமை நான் அப்படியொரு மனிதனாக மாறினேன். தூசி போலப் பயனற்றவர்கள் என்றும், காற்றைப் போல யாராலும் கவனிக்கப்படாதவர்கள் என்றும் நினைக்கப்பட்ட திரளான மக்களின் அங்கமாக மாறினேன். மாயா ஏஞ்சலோவின் கவிதையைப் போல அந்த மக்கள் திரள் மேலெழுந்தது; ஃபைஸ் அகமது ஃபைஸின் வரிகளைப் போல, சிம்மாசனங்களைப் பஞ்சைப் போலக் காற்றில் பறக்கடித்தது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க
டெல்லியில் வாழ்பவர்களுக்கு ‘ஜந்தர் மந்தர்’ என்பது செய்தி அறிக்கைகளில் அடிக்கடி கேட்கும் ஒரு இடம், அல்லது வாகனங்களில் கடந்து செல்லும்போது பார்க்கும் இடம். ஆனால், அங்கு நேரில் செல்வோர் மிக குறைவு. சூரியன், சந்திரன், கோள்களின் இயக்கத்தை கண்காணிக்கும் பழமையான விண்வெளி ஆய்வகம் என்பது மட்டுமே பலரின் தெளிவற்ற நினைவாக இருக்கும். ஒட்டுமொத்த பிரபஞ்சத்தையேத் தங்கள் உள்ளங்கைகளில் (ஸ்மார்ட்போன்களில்) வைத்திருக்கும் தலைமுறைக்கு இந்த இடத்தைப் பற்றி நினைக்கக்கூட நேரமில்லை.
ஆனால், கடந்த வாரம் அனைத்தும் மாறியது. டெல்லியின் அனைத்து சாலைகளும், டெல்லிக்கு அப்பால் உள்ள பகுதிகளின் பாதைகளும் ஜந்தர் மந்தரை நோக்கி அமைந்தன. ‘கரப்பான் பூச்சி கட்சி’யால் தொடங்கப்பட்ட இப்போராட்டம், விரைவில் “மக்கள் என்னவாக விரும்பினார்களோ” அதுவாகவே மாறியது. சாதி, வர்க்கம், மதம் மற்றும் பாலினம் என நம்மை பிரித்து வைத்திருந்த அனைத்து எல்லைகளையும் கடந்து இவர்களால் ஒன்று சேரவே முடியாது என்று சொல்லப்பட்ட வழிகளையெல்லாம் தகர்த்து நியாயமான அமைப்புக்காக, சிறந்த வாழ்க்கைக்காக, பொறுப்பு உள்ள அரசாங்கத்திற்காக, அமைதியான முறையில் உரிமையைக் கேட்பதற்காக மக்கள் இணைந்து நின்ற போராட்டமாக அது உருவெடுத்தது.
நாட்கள் பல திட்டமிட்ட பிறகு, சற்றே சந்தேகத்துடனும், சற்றே தயக்கத்துடனும் நான் அங்கு சென்றேன். கனவுப் பட்டினமான கான்நாட் பிளேஸ் கடந்து, ஜந்தர் மந்தர் சாலையை நோக்கி ஆட்டோவில் பயணித்தபோதே, காற்றில் ஏதோ ஒரு மாற்றம் இருப்பதை உணர முடிந்தது. போராட்டக் களத்தை அடைந்ததும் எனக்குள் ஒருவித திகைப்பு ஏற்பட்டது. மரங்களின் மீதும் தடுப்புகளின் மீதும் ஏறி நின்று முழக்கமிடுபவர்கள், போஸ்டர் பிடித்துள்ளவர்கள், ரீல்ஸ் செய்பவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாகப் புன்னகையோடு இருக்கும் இந்த மக்கள் யார்?
தனித்து நின்று, தங்களின் இருப்பைப் பயமின்றிப் பதிவு செய்யும் இளம் பெண்கள் யார்? வீதிகளில் வியர்வை சிந்திப் போராடவோ, தடி அடிகளை எதிர்கொள்ளவோ அஞ்சாத இந்த இளைஞர்கள் யார்? திரைகளில் இருந்து கண்களை எடுக்கவே முடியாது என்று நாம் நினைத்த அந்த தலைமுறை எங்கே போனது? உணர்ச்சிகள் கொந்தளித்து, இந்தப் போராட்டம் கட்டியெழுப்பிய அனைத்தையும் அடித்துச் செல்லும் சூழல் உருவானபோதும்; தண்ணீர், விசிறி, உணவளித்து உதவி செய்யத் துடித்த அந்த மனிதர்கள் யார்?
திடீரென மேடைக்கு அருகில், பாதையின் மறுமுனையிலிருந்து ஏதோ ஒரு சலசலப்பு தொடங்கியது. பயந்த மக்கள் நாலாபுறமும் ஓடத் தொடங்கினர். நெரிசல் ஏற்படுமோ என்ற பீதி அனைவரையும் தொற்றிக்கொண்டது. போராட்டத்தின் மறுபக்கத்தில் நண்பர்களுடன் இருந்த என் மகளைப் பற்றிய பயம் எனக்குள் ஏற்பட்டது. அடுத்த கணமே, நானும் என் கணவரும் கண்ணீர் புகைக் குண்டுகளின் புகையால் சூழப்பட்டோம். அது எங்கள் கண்கள், நாசி மற்றும் தொண்டையை அடைத்து, மூச்சுவிட முடியாமல் எங்களைச் சுருண்டு விழச் செய்தது.
கண்ணீர் புகைத் தாக்குதலின்போது செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை அனைத்தும் மறந்துபோயின. ஆனால், மீண்டும் சில உதவிக்கரங்கள் நீளத் தொடங்கின. எங்களை விரைவாக ஒரு முட்டுச் சந்திற்குள் அழைத்து சென்று, முகம் மற்றும் கண்களைக் கழுவத் தண்ணீர் பாட்டில்களைக் கொடுத்தனர்; கண்களைத் தேய்க்க வேண்டாம் என்று அறிவுறுத்தினர். அடுத்த சில விநாடிகளில், காம்பவுண்ட் சுவருக்கு அப்பால் இருந்த தன்னார்வலர்கள் கூடுதல் தண்ணீர் பாட்டில்களையும், முகமூடிகளையும் வழங்கி உதவினர்.
அதற்குள் அடுத்த சுற்று கண்ணீர் புகைக் குண்டுகள் வெடித்தன. காம்பவுண்ட் சுவரின் கதவுகள் திறக்கப்பட்டு, அங்கு திரண்டிருந்த எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். அது ஒரு தேவாலயக் கட்டிடம். வெளியே மைதானத்தில் நிற்காதீர்கள்… அது மிகவும் ஆபத்தானது என்று கூறி அமைதியாகவும் விரைவாகவும் எங்களை உள்ளே அழைத்துச் சென்றனர். இருண்ட அந்த ஆலயத்திற்குள் நுழைந்து, காலியாக இருந்த மரப் பெஞ்சுகளில் நாங்கள் அமர்ந்தோம். வெளியே கத்தோலிக்கக் குழப்பம் நீடித்ததால், மேலும் பலர் உள்ளே வந்துகொண்டே இருந்தனர்.
வெளியே நடக்கும் வன்முறை சத்தம் கதவுகள் திறக்கும் போதெல்லாம் உள்ளே கேட்டது. கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கும் போதெல்லாம் சுவர்கள் அதிர்ந்தன. 1, 2, 3… 10 என குண்டுகள் வெடித்துக்கொண்டே இருந்தன. வெளியில் என்ன நடக்கிறது என்று புரியவில்லை. என் கணவரும் நானும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டோம். உடனே எங்க தொலைபேசிகளை எடுத்து, என் மகளை உடனடியாக வீட்டிற்கு செல்லும்படி கத்தினோம். அந்தப் பக்கம் அமைதியாக இருக்கிறது என்பதற்காக அப்படியே இருக்கும் என்று அர்த்தமில்லை, உடனே கிளம்பு என்று உத்தரவிட்டோம். அடுத்து, துப்புரவுப் பணியில் தன்னார்வலராகப் பங்கேற்க வந்துகொண்டிருந்த என் மகனைத் தொடர்புகொண்டு, நாங்கள் பயப்படுவதைத்தான் அவர்கள் விரும்புகிறார்கள் என்று அவன் வாதிட்டபோதும், இல்லை, திரும்பிப் போ, மற்றொரு நாள் வரலாம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன்.
அங்கு இருந்த தன்னார்வலர்கள் வெளியில் போராடும் அதே இளைஞர்களின் வயதையொத்தவர்கள் எங்களைப் பதற்றப்பட வேண்டாம் என்றும், காத்திருக்கும்படியும் கேட்டுக்கொண்டனர். எங்களிடம் கூடுதல் தண்ணீர் இருக்கிறது, தேவைப்பட்டால் சிற்றுண்டி உள்ளது என்றனர். மருத்துவ உதவிய தேவைப்பட்டால் உதவ ஒரு மருத்துவர் வந்தார், அருகில் உள்ள கட்டிடத்திலிருந்து 4 செவிலியர்கள் வரவழைக்கப்பட்டனர். மூச்சுத் திணறலுடன் வந்த இளைஞருக்கு ரத்த அழுத்தம் பரிசோதிக்கப்பட்டது. அரசாங்கத்தின் அடக்குமுறையை இவ்வளவு அருகில் கண்டு திகைத்துப் போய், முசாபர்நகர் முதல் ஜாமியா நகர் வரை நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வந்திருந்த நாங்கள் அங்கிருந்து எங்கும் நகரவில்லை.
திடீரென ஒரு கீபோர்டு இசைக்கருவி வெளியே எடுக்கப்பட்டது. யார் பாடுகிறீர்கள்? என்று ஒரு தன்னார்வலர் கேட்டார். ஒரு பெண், அதைத் தொடர்ந்து மற்றொரு பெண் முன்னால் வந்தனர். ஹம் ஹோங்கே காமியாப் (நாம் வெற்றி பெறுவோம்) என்ற பாடலுடன் தொடங்கினர். அனைவரும் கைதட்டிப் பாடினர். தொடர்ந்து தேரி ஹே ஜமீன் பாடல் இசைக்கப்பட்டபோது, கடவுளே, நீ மட்டுமே இருக்கிறாய் என்ற வரிகள் இயேசுவின் இல்லத்தில் மிக உரத்த குரலில் ஒலித்தன. திடீரென மெல்லிய குரல் அந்தப் பாடலைக் கடந்து கேட்டது ராஜினாமா வந்துவிட்டதா?
ஊடகவியலாளர்கள் யாராவது இருக்கிறார்களா என்ற கேள்வி என்னிடம் வந்தது. நான் சிலருக்கு அழைப்பு விடுத்தேன்; முதலில் தொடர்பு கொண்டவருக்குத் தெரியவில்லை. பின்னர் மற்றொருவரிடமிருந்து பதில் வந்தது ஆம், ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது. நான் திரும்பி அந்தச் செய்தியைச் சொன்னதும், அங்கிருந்தவர்களிடம் இருந்து மகிழ்ச்சி பெருமூச்சும், தன்னிச்சையான இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக) என்ற முழக்கங்களும் வெடித்தன. அமைதியைப்பேண தன்னார்வலர்கள் கேட்டுக்கொண்டனர், அதை யாருமே மறுக்கவில்லை. தேவாலயத்தின் சுவர்கள் மீண்டும் அதிர்ந்தன; ஆனால் இந்த முறை அது ஆரவாரத்தாலும் இசையாலும் அதிர்ந்தது. இறுதியில், பின்புறக் கதவு வழியாக சூரியன் பிரகாசிக்கும் புதிய பகலுக்குள் நாங்கள் வெளியேறியபோது, மக்களின் அந்த ஒரே குரல் மட்டுமே காற்றில் எதிரொலித்தது: “புரட்சி வந்துவிட்டது”
