உக்ரைனில் இந்தியர்கள் சென்ற கப்பல் மீது தாக்குதல்

புதுடில்லி: உக்ரைன் ஒடேசா துறைமுகம் அருகே இந்திய மாலுமிகள் 4 பேர் சென்ற வணிகக்கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருவர் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், எஞ்சிய இருவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு ரஷ்யா – உக்ரைன் இடையேயான போர் துவங்கியதில் இருந்து, கருங்கடல் பகுதியில் அமைந்துள்ள உக்ரைனின் மிக முக்கியமான ஒடேசா துறைமுகத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, வணிகக் கப்பல் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு ரஷ்யாவுக்கு இந்தியா தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இந்த சூழலில், இந்திய மாலுமிகள் சென்ற மற்றொரு வணிகக்கப்பல் மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக உக்ரைனில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட அறிக்கையில்; ‘எம்.வி ஏஜிஎன் ராக்னர்’ என்ற கப்பல் ஒடேசா துறைமுகத்தில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது. இந்திய இருவர் பாதுகாப்பாக இருக்கும் நிலையில், எஞ்சிய இருவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக உதவி தேவைப்படும் இந்திய மாலுமிகள் தொடர்பு கொள்ள ரஷ்யா மற்றும் உக்ரைனைச் சேர்ந்த இந்திய தூதரகங்கள் உதவி எண்களை வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவுக்கான இந்திய தூதரக உதவி எண்; +7 9652773414

உக்ரைனுக்கான இந்திய தூதரக உதவி எண்+38 0933559958

Source link