காத்மாண்டு: இந்தியாவின் ரூ.200 மற்றும் ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த நேபாளம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய ரூபாய் நோட்டுகள் நேபாளத்தில் புழக்கத்தில் இருந்து வருகின்றன. 2016ல் மேற்கொள்ளப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு, இந்தியாவின் 100 ரூபாய் நோட்டுகளை மட்டுமே பயன்படுத்த நேபாளம் அனுமதி வழங்கியிருந்தது. ரூ.200, ரூ.500 நோட்டுகளை பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. தற்போது அந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த ரூபாய் நோட்டுகள் 2016ம் ஆண்டு நவ.9ம் தேதி பிறகு அச்சடிக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
இந்த ரூபாய் நோட்டுகளை வேறு நாட்டில் இருந்து கொண்டு வர அனுமதி இல்லை. இந்தியாவில் இருந்து வருபவர்கள மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு மட்டுமே மக்கள் இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
