புதிய வருமான வரிச் சட்டம் வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வருகிறது. வரி விகிதங்களில் மாற்றம் இல்லை; ஆனால் விதிகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கான விதிகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் தற்போது வெளியிட்டுள்ளது.
முக்கிய அம்சங்கள்
*சட்டத்தின் பிரிவுகள் 819லிருந்து 536ஆக குறைப்பு
* கடினமான வார்த்தைகளுக்கு பதிலாக 39 புதிய அட்டவணைகள் மற்றும் 40 சூத்திரங்கள் அறிமுகம்
ஹெச்.ஆர்.ஏ., சலுகை
* 50% விலக்கு பெறும் நகரங்கள் 4ல் இருந்து 8ஆக உயர்வு
* வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் குறித்த தகவல் இனி கட்டாயம்
பான் கார்டு கட்டாயம்
* ஆண்டுக்கு ரூ.10 லட்சத்துக்கும் மேல் வங்கியில் டிபாசிட் செய்ய/ எடுக்க
* ரூ.5 லட்சத்துக்கும் மேல் வாகனம் வாங்க
* ரூ.1 லட்சத்துக்கும் மேல் ஹோட்டல்/ஈவென்ட் செலவுக்கு
* ரூ.20 லட்சத்துக்கும் மேல் சொத்து பரிவர்த்தனை
டிஜிட்டல் கரன்சி
* கிரிப்டோ பரிவர்த்தனை விபரங்கள் வரி துறைக்கு வழங்குதல் கட்டாயம்
* ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கரன்சியான சி.பி.டி.சி., அங்கீகரிக்கப்பட்ட பண பரிமாற்ற முறையாக சேர்ப்பு
