வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (20.03.2026)

தேயிலை தூள்

கடந்த வாரம் ரூ.115.00

தற்போது ரூ.115.00

பசுந்தேயிலை வரத்து குறைவால் தேயிலை தூள் உற்பத்தியும் குறைந்துள்ளது. பனி காலம் முடிந்தால் உற்பத்தி அதிகரிக்கும். தற்போது வாரத்துக்கு 12 லட்சம் கிலோ தேயிலைத்தூள் சந்தைக்கு வருகை.

சந்தை: குன்னூர் நீலகிரி.

காராமணி

கடந்த வாரம் ரூ.67.00

தற்போது ரூ.67.00

வரத்து துவங்கி உள்ளது. இன்னும் இரண்டு மாதத்துக்கு சந்தைக்கு வந்து கொண்டு இருக்கும்.வரத்து அதிகரித்தால் தரமான காரமணிக்கு கூடுதல் விலை கிடைக்க வாயப்பு உள்ளது.

சந்தை: செய்யாறு, திருவண்ணாமலை.

பாசிப்பருப்பு

கடந்த வாரம் ரூ.115.00

தற்போது ரூ.120.00

தமிழகத்தில் போதுமான உற்பத்தி இல்லை. கர்நாடகா, மஹாராஷ்டிராவில் இருந்து பாசிப்பருப்பு வருகிறது. வரத்து சீராக உள்ளது. போர் உள்ளிட்ட காரணங்களால் இந்த விலையே நீடிக்கும்.

சந்தை : விருதுநகர்.

Source link