வினாத்தாள் கசிவு தொடர்பான முறைகேடுகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்க வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுகிறது. இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
நாடு முழுவதும் நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடு உள்ளிட்டவற்றிற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்று சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் மற்றும் கரப்பான் பூச்சி ஜனதா கட்சியை சேர்ந்த நிர்வகிகள், மாணவர் அமைப்பினர் என டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதற்கிடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. இந்த கூட்டத்தொடரில் நீட் வினாத்தாள் கசிவு , முறைகேடு குறித்து பேச காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.
திமுக பாஜக கூட்டணியா?நெருக்கடியில் திமுக? காரணம் இதுதானா?
நீட் முறைகேட்டிற்கு எதிராக டெல்லியில் வெடித்த போராட்டம்
மேலும் போராட்டகாரர்கள் நாடாளுமன்றத்தை முற்றுக்கையிட முயன்ற போது காவல்துறையினர் அவர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந் து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டகளத்தில் குதித்ததால் நிலை மோசமானது. இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி நீட் வினாத்தாள் கசிவு முறைகேட்டில் ஈடுப்பட்டவகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றம் அமைக்கப்படும் என்று உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சராக இருந்த தர்மேந் திரபிரதான் தன்னுடைய பதவியை ராஜனாமா செய்தார். பிரல்ஹாத் ஜோஷிக்கு கல்வி அமைச்சகத்தின் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது
மக்களவையில் தாக்கல்
இந்த நிலையில், தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் நோக்கில், பொதுத் தேர்வுகள் சட்டத்தில் திருத்தம் செய்ய அரசு தயாராகி வருகிறது. இந்தத் திருத்த மசோதா, ஜூலை 27, திங்கட்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்படுகிறது. விரைவான விசாரணைக்காக விரைவு நீதிமன்றங்களை அமைத்தல், காவல்துறையின் விரைவான விசாரணை போன்ற நடவடிக்கைகளை இந்த மசோதா முன்மொழிகிறது
மசோதாவின் முக்கிய திருத்தங்கள் மற்றும் சிறப்பம்சங்கள்
சிறப்பு விரைவு நீதிமன்றங்களை நிறுவுதல்
தேர்வு முறைகேடுகள் தொடர்பான வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்காக, அமர்வு நீதிமன்றங்களை ‘சிறப்பு விரைவு நீதிமன்றங்களாக’ ஒதுக்கீடு செய்ய மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
விசாரணைக்கான 3 மாத காலக்கெடு
சிறப்பு விரைவு நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்குகள் 3 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும். விசாரணையை தினசரி அடிப்படையில் நடத்தி, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்து 3 மாதங்களுக்குள் இந்த செயல்முறையை முடிப்பது கட்டாயமாகும்.
விசாரணைக்கான 2 மாத காலக்கெடு
இந்த வழக்கு குறித்த விசாரணை வெறும் 2 மாதங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்.
சிறப்புப் பணிக்குழு (STF) அமைத்தல்
பல மாநிலங்களில் பரவியுள்ள அல்லது பெரிய அளவிலான தேர்வு மோசடிகளை விசாரிக்க ஒரு சிறப்புப் பணிக்குழுவை அமைக்கும் அதிகாரம் மையத்திற்கு உண்டு.
கடுமையான தண்டனை மற்றும் அபராதங்கள்
வினாத்தாள் கசிவுகளில் ஈடுபட்ட தனிநபர்கள், பயிற்சி மையங்கள் மற்றும் முகமைகளுக்கு நீண்ட சிறைத் தண்டனைகளையும், பெரும் நிதி அபராதங்களையும் விதிப்பதற்காகக் கடுமையான சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன.
சிறப்பு அரசு வழக்கறிஞர்களின் (சட்ட ஆலோசகர்) நியமனம்
இந்த வழக்குகளைத் திறம்படக் கையாள்வதற்காகச் சிறப்பு வழக்கறிஞர்களை நியமிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தேர்வு முறையின் மீது பொதுமக்கள் மற்றும் தேர்வர்களுக்கு உள்ள நம்பிக்கையை மீட்டெடுக்கவும், எதிர்காலத்தில் வினாத்தாள் கசிவுகளை முற்றிலுமாகத் தடுக்கவும் மத்திய அரசு இந்தக் கடுமையான திருத்தத்தை அமல்படுத்துகிறது
Source link
