மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ்; லடாக் செல்கிறார் சோனம் வாங்சுக்

புதுடில்லி: சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் இன்று (ஜூலை 27) மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். அதன் பிறகு அவர் லடாக் திரும்பி செல்கிறார்.

டில்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினருக்கு ஆதரவாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, லடாக் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் சமீபத்தில் 26 நாட்களாக இருந்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தை நிறைவு செய்தார்.

தொடர் உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் இன்று (ஜூலை 27) காலை 11.30 மணிக்கு மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவுள்ளார். அதன் பிறகு சோனம் வாங்சுக் லடாக் திரும்பி செல்கிறார்.

அவர் லடாக் திரும்புவதற்கு முன்பு ராஜ்காட்டில் மகாத்மா காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவார் என்று அவரது குழுவினர் தெரிவித்தனர்.

Source link