வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, பங்குச் சந்தைகள் ஏற்றத்துடனே முடிந்தன.
இருப்பினும், நேற்றைய உயர்வில் இருந்து சென்செக்ஸ் கிட்டத்தட்ட 800 புள்ளிகள் குறைந்து முடிந்திருப்பது, முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் சந்தையை அணுகுவதையே காட்டுகிறது. வரும் திங்களன்று சந்தை ஏற்றம் காணுமா அல்லது மீண்டும் சரிவைக் காணுமா என்ற கேள்விக்கான பதிலுடன் காத்திருக்கின்றனர். நேற்றைய வர்த்தக முடிவில், சென்செக்ஸ் 325 புள்ளிகள் உயர்ந்து 74,532 புள்ளிகளில் முடிந்தது. வர்த்தகத்தின் இடையில் சென்செக்ஸ் 1,079 புள்ளிகள் வரை உயர்ந்து காணப்பட்டது. நிப்டி 112 புள்ளிகள் அதிகரித்து 23,114 புள்ளிகளில் நிறைவடைந்தது.பொதுத்துறை வங்கிகள், ஐ.டி., உலோகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த நிறுவன பங்குகளில் முதலீட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டினர்.
சந்தையை அழுத்தும் காரணங்கள்
* பிரீமியம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.2 உயர்வு
* முதலீட்டாளர்கள் பங்குகளை டெலிவரி எடுக்க தயக்கம்
* அன்னிய முதலீட்டாளர்கள் 7,558 கோடிக்கு விற்பனை
