மும்பை: ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்தியாவின் சசிகுமார் முகுந்த், சித்தார்த் ரவாத் முன்னேறினர்.
மும்பையில், ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், நெதர்லாந்தின் ஸ்டிஜ்ன் பெல் மோதினர். அபாரமாக ஆடிய சசிகுமார் 4-6, 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் சித்தார்த் ரவாத், தேவ் ஜாவியா மோதினர். இதில் சித்தார்த் ரவாத் 6-3, 3-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு ‘ரவுண்டு-16’ போட்டியில் இந்தியாவின் மணிஷ் சுரேஷ்குமார் 2-6, 3-6 என பிரான்சின் புளோரென்ட் பாக்சிடம் தோல்வியடைந்தார். இந்தியாவின் கரன் சிங் 6-4, 3-6, 0-6 என ரஷ்யாவின் திமோபி டெரெபாஸ்கோவிடம் வீழ்ந்தார்.
