– நமது நிருபர் – தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இரண்டு நாளில் தயாரித்து கொடுக்க, 30 பேருக்கு தலா, 25 ஆயிரம்

– நமது நிருபர் –

தமிழக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இரண்டு நாளில் தயாரித்து கொடுக்க, 30 பேருக்கு தலா, 25 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி, தேர்தல் அறிக்கை குழு தலைவர் கார்த்தி சிதம்பரம் உற்சாகப்படுத்திய தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு தலைவராக கார்த்தியும். மாநில நிர்வாகிகள் 30 பேர், அதன் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களை அழைத்து, சென்னையில் நேற்று முன்தினம், கார்த்தி ஆலோசனை நடத்தினார். ‘மக்களை கவரும் வகையில், தேர்தல் அறிக்கை இருக்க வேண்டும்’ என, கார்த்தி அறிவுறுத்தியுள்ளார்.

இரண்டு நாட்களில், தமிழகம் முழுதும் உள்ள மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை எல்லாம் நிறைவேற்றி தரும் வகையில், சாரம்சங்கள் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு தலா, 25, ஆயிரம் ரூபாய் வழங்கி உள்ளார். அந்த பணத்தை பயண செலவுக்கு பயன்படுத்துமாறும் கூறியிருக்கிறார்.

3 ‘சீட்’ கேட்கும் ஐ.என்.டி.யு.சி.,

தமிழக காங்கிரஸ் தொழிற்சங்கமான ஐ.என்.டி.யு.சி., சார்பில் ஏற்கனவே பலர் எம்.பி.,க்களாகவும் எம்.எல்.ஏ.,க்களாகவும் இருந்துள்ளனர். அந்த வகையில், வரும் சட்டசபைத் தேர்தலிலும் தமிழக ஐ.என்.டி.யு.சி., தொழிறசங்க நிர்வாகிகள் போட்டியிட விரும்புகின்றனர். அதனால், தொழில் சங்க நிர்வாகிகள் 3 பேருக்கு, போட்டியிட வாய்ப்பு வழங்க வேண்டும் என, மாநில நிர்வாக் குழுக் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக ஐ.என்.டி.யு.சி., தலைவர் மு.பன்னீர்செல்வம் கூறுகையில், ”தொழிற்சங்க உறுப்பினர்கள், 7 லட்சம் பேர் உள்ளனர். அவர்களின் குடும்ப ஓட்டுக்கள், தி.மு.க., கூட்டணிக்கு ஒட்டுமொத்தமாக கிடைக்க, ஐ.என்.டி.யு.சி., நிர்வாகிகளுக்கு பிரதிநிதித்துவம் தர வேண்டும்,” என்றார்.

Source link