தமிழகத்தில் நடப்பது எதுவுமே முதல்வருக்கு தெரியவில்லை: நயினார் நாகேந்திரன் சாடல்

உண்மையில், முதல்வருக்குத் தமிழகத்தில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், விளாத்திகுளத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பாரா? மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முதல்வருக்கு அதுவும் தெரியவில்லை.சனிக்கிழமை (இன்று) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். அவர் வந்தவுடன், எங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நாங்கள் முறைப்படி தொடங்குவோம். நான் டெல்லிக்குச் செல்லவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தான் சென்னை வருகிறார். எனவே, எங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சென்னையில் தான் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.

Source link