திருடன் என்று அவதூறு.. அதிமுக கூட்டத்திலிருந்து பாதியில் வெளியேறிய கே.சி. வீரமணி: என்ன நடந்தது? – former minister kc veeramani walked out midway boycotting the aiadmk meeting

சட்டமன்ற தேர்தலுக்கு பின்பாக அதிமுக இரண்டு குழுக்களாக பிரிந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான சட்டமன்ற உறுப்பினர்கள் குழுவில் கே.சி. வீரமணி அங்கம் வகித்தார். அவர் தவெக அரசுக்கு ஆதரவாக சட்டமன்றத்தில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் வாக்களித்தார். இதன் காரணமாக அவரை இபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சனம் செய்தனர். இந்நிலையில் கே.சி. வீரமணி, அதிமுக கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அதிமுக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் நடந்து இந்த கூட்டத்தில் அதிமுகவை சார்ந்தவர்கள் பங்கேற்றனர். குறிப்பாக முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போதைய ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினரான கே.சி. வீரமணி இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்டு பாதியில் வெளியேறினார்.

அதாவது கடந்த தேர்தலில் ஆம்பூர் தொகுதியில் மாதனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் சமூக வலைத்தளங்களில் கே.சி. வீரமணி குறித்து அவதூறு பரப்பியதாக கூறப்படுகிறது. குறிப்பாக திருடன் என அவர் குறித்து பேசியதாக சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் வாணியம்பாடியில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில், கே.சி. வீரமணி குறித்து அவதூறு பரப்பிய வெங்கடேசன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் மணிகண்டன் கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை தொடர்ந்து அங்கிருந்த கே.சி. வீரமணி ஆதரவாளர்கள் சிலர், மாதனூர் அதிமுக மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும். அது வரை கூட்டம் நடக்கக் கூடாது என்று கூச்சலிட்டனர். அப்போது சிலர் கூட்டம் முடிந்த பிறகு இதுப்பற்றி பேசி கொள்ளலாம் என தெரிவித்தனர். இதன் காரணமாக இரண்டு தரப்புக்கு இடையில் அங்கயே வாக்குவாதம் ஏற்பட்டு சலசலப்பானது.

அதன்பின்னர் கே.சி. வீரமணி பேசுகையில், எனக்கும் பொதுச்செயலாருக்கும் இடையில் ஆயிரம் பிரச்சனைகள் உள்ளது. அதனை நாங்களே பேசி தீர்த்து கொள்வோம். ஒன்றிய செயலாளர் என்னை திருடன் என கூறியது குறித்து அதிமுக தலைமை மன்னிப்பு கேட்க சொல்லியும், இந்த கூட்டத்திற்கு வராமல் வெங்கடேசன் புறக்கணித்துள்ளார். அவர் வந்து என்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என உறுதியாக தெரிவித்தார் கே.சி. வீரமணி.

அதோடு அவர் வந்து மன்னிப்பு கேட்கும் வரை, நானும் கூட்டத்திற்கு வர மாட்டேன் புறக்கணிகிறேன். அவர் எப்போது மன்னிப்பு கேட்கிறாரோ, அப்போது நான் கூட்டத்தில் பங்கேற்கிறேன் என சொல்லிவிட்டு அங்கிருந்து கே.சி. வீரமணி கிளம்பி விட்டார். மேலும் தலைமை தன்னிடம் மன்னிப்பு கேட்க சொல்லி விட்டது. நான் செய்தது தவறு. தான் தோன்றித்தனமாக பேசிவிட்டேன் என கூறி சொன்னார்கள். ஆனாலும் மன்னிப்பு கேட்காமல் கூட்டத்தை புறக்கணித்துள்ளார் என்ற குற்றச்சாட்டை கே.சி. வீரமணி முன்வைத்துள்ளார்.

இதனால் இந்த விவகாரம் தற்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. கே.சி. வீரமணி கூட்டத்தினை புறக்கணித்து வெளியேறிய நிலையில், அவருடைய ஆதரவாளர்களும் வெளிநடப்பு செய்துள்ளனர். கே.சி. வீரமணி தற்போது இபிஎஸ் தரப்பு அதிமுக எம்எல்ஏக்கள் குழுவில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link