திருவள்ளூர், பெரியாளையம் அருகே மஞ்சங்கரணை பகுதியில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு அவரது ரசிகர் நற்பணி மன்றம் சார்பில் ரத்த தானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற தனுஷ் நலத்திட்ட உதவிகள் வழங்கி ரசிகர்களின் குடும்பத்துடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இதையடுத்து மேடையில் பேசிய அவர், “இங்கே இவ்ளோ பேர் ஒன்னு கூடியிருக்கீங்க. அந்த ஒற்றுமைக்கு ஒரு பவர் இருக்கு. அந்த பவர நீங்க பாசிடிட்டிவான வழியில கொண்டு போனும். அந்த பவருக்கு ஒரு நோக்கம் கொடுக்கணும். சும்மா சந்திச்சோம், ஃபோட்டோ எடுத்தோம்னு அப்படியே விட்டுடாம நிறைய நலத்திட்டங்கள செய்யணும். உங்க ஏரியாவுல யாருக்கு என்ன தேவைன்னு தெரிஞ்சு உதவி பண்ணனும். நான் உங்கள நினைச்சு இன்னும் பெருமை படணும். நீங்க செய்வீங்கன்னு நான் நம்புறேன்” என்றார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் அவரது அரசியல் வருகைக்கான ஆரம்பமா என்றும் சிலர் கருத்து கூறி வருகின்றனர். சமீபத்தில் அவரது கட்சிக் கொடி என ஒரு கொடி வைரலான நிலையில் அது ரசிகர் மன்ற கொடி என விளக்கமளிக்கப்பட்டது.
இதனிடையே தனுஷ் பேசிய இன்னொரு வீடியோவும் வைரலாகி வருகிறது. அவர் பேசியதாவது, “அஜித் சார் சொன்ன மாதிரி நீயா தோத்துட்டன்னு ஒத்துக்கிற வரைக்கும் உன்ன யாராலையும் தோக்கடிக்க முடியாது” என்றார். இது விவேகம் படத்தில் அஜித் பேசியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Just listen to the response from the crowd when Actor #Dhanush utters the words about our #AjithKumar sir.
“Neeyaa thothutta nu othukkura varai unna yaaraalum thorkadika mudiyaadhu” pic.twitter.com/TJgNwtujPe
— Mᴀᴀʟɪᴋ Bʜᴀɪ (@Maalik_Bhai) July 26, 2026
