புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தையை பாதிக்கும்

புதுடில்லி: மத்திய கிழக்கு நாடுகளின் போர்ச்சூழல், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளின் எரிவாயு சந்தையை பாதிக்கும் வாய்ப்பு உள்ளதாக தெரியவந்துள்ளது.

‘கத்தார் எனர்ஜி’ நிறுவனத்தின் கணிப்பில் கூறியிருப்பதாவது: கத்தார் நாட்டின் எரிவாயு உற்பத்தி அமைப்புகள் மீது அண்மையில் ஈரான் தாக்குதல் நடத்தியது. இதன் விளைவாக, கத்தாரின் ஏற்றுமதி திறன் 17 சதவீதம் அளவுக்கு பாதிப்பை சந்தித்துள்ளது. இதனால், எரிவாயு வினியோகம், 3 – 5 ஆண்டுகளுக்கு பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு 1.28 கோடி டன் வரை உற்பத்தி முடங்கக்கூடும். இது, ஆண்டுக்கு 1,700 கோடி கன மீட்டர் அளவுக்கு நிகரானது. இது, ஆசியா, ஐரோப்பிய நாடுகளில் எதிரொலிக்கும்.

தற்போதைய பாதிப்பை அடுத்து, ‘போர்ஸ் மெஜர்’ எனும் அவசரகால அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, கத்தாருடன் நீண்ட கால கொள்முதல் செய்த நாடுகளுக்கு, ஒப்புக்கொள்ளப்பட்ட அளவுக்கு பதிலாக, சாத்தியமுள்ள அளவே சரக்கு அனுப்பப்படும். இன்றைய சூழ்நிலை தற்காலிகமானதாக அல்லாமல், அடிப்படை கட்டமைப்பில் ஏற்பட்ட விரிசலாகவே பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

உலகின் மிக நம்பகமான இயற்கை எரிவாயு வினியோக நாடாக கத்தார் பார்க்கப்படுகிறது. அதன் வினியோக அளவு குறையும்போது இந்தியா உள்ளிட்ட நேரடி ஒப்பந்த நாடுகள் உடனடியாக பாதிக்கப்படும். குறிப்பாக ஆசியா மற்றும் ஐரோப்பாவில் எரிவாயு விலை உயரும். நேரடி ஒப்பந்தம் செய்யாத நாடுகளும் பாதிப்புக்கு உள்ளாகும்.

குறுகிய காலத்தில் ஒட்டு மொத்த எரிவாயு அளவுக்கும் மாற்று வழியை கண்டுபிடிக்க முடியாது என்பதால், கட்டமைப்பின் அடிப்படையில் இந்தியா பலவீனமாக இல்லை என்றாலும் நேரடி பாதிப்பு கணிசமான அளவில் ஏற்படும் என்கின்றனர் வல்லுநர்கள்.

Image 1551822

ஆப்ரிக்காவில் எண்ணெய் வாங்கும் முயற்சியில் ஐ.ஓ.சி.,

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், மேற்கு ஆப்ரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்தின் இரண்டா வது பாதியில் கிடைக்கும் வகையில், மேற்கு ஆப்ரிக்கா அல்லது வடக்கு கடற்பகுதி நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. தவிர, மே 6 – 15க்குள் கிடைக்கும் வகையில் ஆசியா பசிபிக் பகுதியிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது.

Source link