தனுஷ் பவர் பேச்சு: தனுஷின் பிறந்தநாளையொட்டி திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அருகில் இருக்கும் தனியார் மருத்துவக் கல்லூரியில் ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. அதில் கலந்து கொண்ட தனுஷை பார்க்க ஏராளமான ரசிகர்கள் கூடியிருந்தார்கள்.
தனுஷ் அரசியலுக்கு வருகிறாராம் என்று கடந்த சில நாட்களாகவே பேச்சாக உள்ளது. இந்நிலையில் ரசிகர் மன்ற விழாவில் தனுஷ் கூறியதாவது, இவ்வளவு பேரால் ஒரு இடத்தில் கூட முடிகிறது. அந்த ஒற்றுமைக்கு ஒரு பவர் இருக்கிறது. அந்த பவரை பாசிட்டிவான வழியில் கொண்டு செல்ல வேண்டும். அந்த பவருக்கு ஒரு பர்பஸ் கொடுக்கணும்.
புகைப்படம் எடுத்தோம், இசை வெளியீட்டு விழாவில் பார்த்தோம், பிறந்தநாள் அன்று பார்த்தோம்னு அப்படியே விட்டுவிடாமல் நீங்கள் எல்லோரும் சேர்ந்து இன்னும் நிறைய நலத்திட்டங்களை செய்ய வேண்டும்.உங்கள் ஏரியாவில், தெருவில், பக்கத்து வீட்டில், எதிர்வீட்டில் யாருக்கு என்ன தேவை என்பதை புரிந்து எல்லோரும் சேர்ந்து கை கோர்த்தால் உங்களால் முடியும். உங்களால் முடிந்த நல்ல விஷயங்களை நீங்கள் கண்டிப்பாக செய்ய வேண்டும். நான் உங்களை நினைத்து இன்னும் பெருமைப்பட வேண்டும். நீங்க செய்வீங்க என்று நான் நம்புகிறேன் என்றார்.
தனுஷ் எதிர்காலம்: நலத்திட்டங்கள் செய்யணும், எல்லோருக்கும் உதவணும் என தனுஷ் சொல்லியிருப்பது சும்மா இல்லை. அரசியலுக்கு வருவதை தான் அப்படி பேசியிருக்கிறார். தனுஷுக்கு 43 வயது தான் ஆகிறது. தற்போதில் இருந்தே கவனம் செலுத்தினால் இன்னும் 5, 10 ஆண்டுகளில் அரசியலுக்கு வந்துவிடலாம். தனுஷை தங்கள் வீட்டு பிள்ளையாக பலரும் பார்க்கிறார்கள். அந்த இமேஜ் அவருக்கு அரசியலில் பெரிதும் கை கொடுக்கும். எங்கு எப்படி பேச வேண்டும் என்பது தனுஷுக்கு தெரியும். அதுவும் அவருக்கு பெரிய பிளஸ் பாயிண்ட் என பேசப்படுகிறது.
தல டயலாக்: தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் சேர வருகிறீர்களா என தனுஷிடம் முதல்வர் விஜய் கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரசிகர் மன்ற விழாவில் அஜித் குமார் பட வசனத்தை பேசியிருக்கிறார் தனுஷ். நம்ம தல அஜித் சார் சொன்னது மாதிரி தான்…நீயா தோத்துட்டனு ஒத்துக்கிற வரைக்கும் உன்னை யாராலும் தோற்கடிக்க முடியாது என்றார். அஜித் குமார் பெயரை கேட்டதும் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்து அரங்கையே அதிர வைத்தார்கள். அந்த ஆரவாரம் அடங்கிய பிறகு என்ன பேபி, If you are bad, I am your dad என்று தனுஷ் சொல்ல ரசிகர்கள் விசில் அடித்தார்கள்.
அஜித் குமார் வசனத்தை பேசியிருக்கிறார் என்றால் தனுஷ் கண்டிப்பாக விஜய் கட்சியில் சேர மாட்டார். தனியாக கட்சி துவங்குவதை தான் இப்படி மறைமுகமாக தெரிவித்திருக்கிறார். ஒரு வேளை அண்ணாமலை உடன் கூட்டணி வைப்பாரோ. ஹர் ஹர் மகாதேவ் என்று சொல்கிறார். தனுஷ் கூட்டணி சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது என்று ரசிகர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
விருது விளக்கம்: எத்தனையோ நல்ல படங்கள் இருக்க ராயனுக்கு போய் தேசிய விருதா என மக்கள் பேசியது தனுஷுக்கு கேட்டுவிட்டது. அது குறித்து தனுஷ் கூறியதாவது, எனக்கு தேசிய விருது கிடைத்திருப்பதை 90 சதவீதம் பேர் எதிர்க்கிறார்கள். எனக்கு அமைஞ்சது, விருது கிடைச்சிருக்கு. இந்த படத்திற்காக உண்மையாக உழைத்திருக்கிறேன். தட்டி விடாதீங்க, தட்டிக் கொடுங்க என்றார்.
Source link
