வாஷிங்டன்: ”ஈரான் மீதான போரில் அமெரிக்கா தனது இலக்குகளை அடையும் தருவாயில் உள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியைப் பாதுகாக்கும் பொறுப்பை மற்ற நாடுகளும் ஏற்க வேண்டும்” என அதிபர் டிரம்ப் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரானின் பயங்கரவாத ஆட்சிக்கு எதிராக மத்திய கிழக்கில் நாம் முன்னெடுத்திருந்த மகத்தான ராணுவ நடவடிக்கைகளை முடித்துக்கொள்ள நாம் பரிசீலித்து வரும் வேளையில், நமது இலக்குகளை அடைவதற்கு நாம் மிக நெருக்கமாக வந்துவிட்டோம்.
* ஈரானின் ஏவுகணைத் திறன்கள், ஏவுதளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய மற்ற அனைத்தையும் முழுமையாகச் செயலிழக்கச் செய்துவிட்டோம்.
* ஈரானின் பாதுகாப்புத் துறை சார்ந்த தொழில் கட்டமைப்பை அழித்துவிட்டோம்.
* ஈரானின் கடற்படை மற்றும் விமானப்படை, வான்வழித் தாக்குதல் தடுப்பு ஆயுதங்கள் உட்பட அனைத்தையும் முழுமையாக ஒழித்துவிட்டோம்.
* ஈரான் அணுசக்தித் திறனைப் பெறுவதற்குச் சற்றும் நெருங்கக்கூட அனுமதிக்காமல் இருத்தல்; மேலும், அத்தகைய சூழல் ஏதேனும் ஏற்பட்டால், அதற்கு அமெரிக்காவால் விரைவாகவும் வலிமையாகவும் பதிலடி கொடுக்கக்கூடிய நிலையில் எப்போதும் உள்ளது.
* இஸ்ரேல், சவுதி அரேபியா, கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன், குவைத் மற்றும் பிற நாடுகள் உட்பட, மத்திய கிழக்கில் அமைந்துள்ள நமது நட்பு நாடுகளை பாதுகாக்க வேண்டும்.
* ஹார்முஸ் ஜனசந்தியை பயன்படுத்தும் பிற நாடுகளே, தேவைக்கேற்ப அதனைப் பாதுகாத்து ஒழுங்குபடுத்த வேண்டும். அமெரிக்கா அதனைச் செய்யாது. அந்நாடுகள் உதவி கோரும் பட்சத்தில், ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க அவர்களது முயற்சிகளுக்கு அமெரிக்கா உதவுவோம்; இருப்பினும், ஈரானின் அச்சுறுத்தல் முழுமையாக ஒழிக்கப்பட்ட பிறகு, அத்தகைய உதவிக்கான தேவை எழாது.
இவ்வாறு அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
