நமது நிருபர்தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 21) நீங்கள்

நமது நிருபர்

தமிழகம், தேசிய மற்றும் சர்வதேச அளவில் இன்று நடக்கும் முக்கிய நிகழ்வுகள். இன்று (மார்ச் 21) நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய செய்திகள் என்னென்ன?

அது எத்தனை மணிக்கு என்பது குறித்து ஓர் சிறப்பு அலசல். மேலும் தொடர்ந்து விவரங்களை அறிய தினமலர் இணையதளம் தொடர்ந்து படியுங்கள்.

* மா.கம்யூ., கட்சியின் செயற்குழு கூட்டம் 23ம் தேதி நடக்க இருந்த நிலையில், சூழலின் அவசியம் கருதி அவசர கூட்டமாக இன்று நடத்தபட உள்ளதாக அறிவிப்பு வெளியாக உள்ளது.

* தவெக சார்பில் போட்டியிடுவோருக்கான 2ம் கட்ட நேர்காணல் நடந்தது. மேலும் 50 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் இறுதி செய்துள்ளதாக தகவல்; புதுச்சேரி வேட்பாளர் பட்டியலை இன்று அறிவிக்கிறார்.

* தொகுதி பங்கீடு தொடர்பாக டில்லியில் இன்று (மார்ச் 21) காலை அமித்ஷாவை தேஜ கூட்டணியில் உள்ள அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சந்திக்கிறார். இன்று காலை 11.30 மணிக்கு நேரம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

* அதிமுக-பாஜ தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஆலோசிக்க இன்று மதியம் 12 மணிக்கு தமிழக பாஜ மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வருகிறார். மாலை 4 மணிக்கு அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்ஐ சந்தித்து தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.

* ரம்ஜான் பண்டிகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. காலையிலேயே புத்தாடை அணிந்து இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டு மகிழ்ந்தனர்.

Source link