பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு வேலை: கொள்கை முடிவு

கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கின் விசாரணையில், காவல்துறை கூட்டத்தைச் சரியாகக் கையாளாததே நெரிசலுக்கும் 41 பேரின் உயிரிழப்பிற்கும் காரணம்; பலியானவர்கள் மீது எந்தத் தவறும் இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் அதிரடியாக வாதாடியுள்ளார்.

உயர் நீதிமன்ற கிளையில் நடைபெற்று வரும் இந்த வழக்கின் விசாரணையின் போது அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கரூரில் காவல்துறையினர் கூட்டத்தைச் சரியாகக் கையாளாததன் காரணத்தினாலேயே பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதன் விளைவாகவே உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில் உயிரிழந்த 41 பேர் மீதும் எந்தவிதமான தவறும் இல்லை என்று தெளிவாகத் தெரிவித்தார்.

மேலும், கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கப்பட்டது குறித்த கேள்விக்கு விளக்கம் அளித்த அரசுத் தரப்பு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி வழங்கியது ‘அரசின் கொள்கை முடிவு’ (Policy Decision) என்று உயர் நீதிமன்றக் கிளையில் விளக்கம் அளித்துள்ளது.

இவ்வழக்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், கருணை அடிப்படையிலான பணி நியமனங்களை பொறுத்தவரை (Compassionate Appointments), அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் முன்அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் தவறை அரசே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதும், உயிரிழந்த குடும்பங்களுக்கான அரசு பணி நியமனம் குறித்த சட்டப்பூர்வ விளக்கங்களும் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.

Source link