“40 வருட தந்தையின் கனவு என் மூலம் நிறைவேறியது…”

‘பியார் பிரேமா காதல்’, ‘ஸ்டார்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இளன் தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். தனது முதல் பட தலைப்பை போலே ‘பியார் பிரேமா கல்யாணம்’ என்ற தலைப்பில் ஒரு புதுப்படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் நடித்துள்ளார். இதில் நாயகியாக சான்வி மேகா நடித்துள்ளார். இயக்குநரின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த யுவன் ஷஙர் ராஜாவே இதிலும் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு மோஷன் போஸ்டருன் வெளியாகியுள்ளது. 

அந்த வீடியோவில், நாயகன் நாயகி கழுத்தில் மணக்கோலத்தில் தாலி கட்ட ‘ஓடி போய் கல்யாணம் பன்றது’ என்ற வாசகம் இடம் பெற அடுத்ததாக நாயகி மணக்கோலத்தில் ஓட அவரை துரத்தி கொண்டு நாயகன் ஓட ‘கல்யாணம் பன்னிட்டு ஓடி போரது’ என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இது இரண்டும் இன்ஸ்டாகிராமில் போஸ்டாக போட்டு எது பிடித்திருக்கிறது என்ற பாணியில் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த மாதமான ஆகஸ்ட் 21ஆம் தேதி நெட் ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது. தமிழைத் தாண்டி இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளத்திலும் காணக்கிடைக்கிறது. 

இந்தப் படம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட இயக்குநர் இளன், “நான்கு தசாப்த காலக் கனவு. 1980-களில் ஒரு முன்னணி நடிகராக வேண்டும் என்ற லட்சியத்துடன் என் தந்தை கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்தார். இன்று என் மூலமாக அந்தக் கனவு நனவாகிறது. நடிகராகவும் இயக்குநராகவும் நான் பணியாற்றிய முதல் திரைப்படமான ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆகஸ்ட் 21 அன்று நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

பல தசாப்தங்களாக இருந்த இந்தக் கனவை நனவாக்கியதற்காக ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட், நெட்ஃப்ளிக்ஸ் சவுத் மற்றும் எனக்கு மிகவும் பிடித்த யுவன் ஷஙக்ர் ராஜா சார் ஆகியோருக்கு நன்றி. இப்படத்திற்கு மீண்டும் ஒருமுறை யுவன் சங்கர் ராஜாவின் இசை. எனக்கும் என் குழுவினருக்கும் உங்கள் ஆதரவை தாருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Source link