வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி அழகிரி மீது தவெக அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பியூஷ் மனுஷ் மீதும் நடவடிக்கை எடுக்காதது பற்றியும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
சட்டம் அனைவருக்கும் சமம். இது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் ஆட்சி, அதிகாரத்தில் இருக்கும் அரசு அதை எல்லா நேரங்களிலும் சரியாக செய்வதில்லை என்பது தான் பலருக்கு புரியாத புதிராக உள்ளது. உதாரணமாக விளாத்திகுளம் திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் விவகாரத்தை எடுத்து கொள்வோம். முதலமைச்சர் விஜய் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். சட்டப்பேரவையை பூட்டினாலும் எலும்பை உடைப்போம் என்று மிரட்டும் வகையில் பேசினார். இதையடுத்து கோவில்பட்டி கிழக்கு போலீசில் தவெக சார்பில் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார்.
கயல்விழி அழகிரி மீது நடவடிக்கை எங்கே?
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சகோதரர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி கடந்த சில நாட்களுக்கு முன்பு வங்கி மேலாளரை அலுவலகத்திற்கு நேரில் சென்று மிரட்டி கன்னத்தில் அறைந்தார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசில் எஸ்.பி.ஐ தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக தவெகவில் இணைய கயல்விழி முயற்சி செய்துள்ளார். ஆனால் சில எதிர்பார்ப்புகளை தவெக தலைமை பூர்த்தி செய்யாததால் இதுவரை இணைப்பு சாத்தியப்படவில்லை எனக் கூறுகின்றனர்.
நாளை டெல்லியில் நடக்க போவது என்ன? பாஜக எடுக்க போகும் முடிவு!
எஸ்.பி.ஐ வங்கி மேலாளரை அறைந்த கயல்விழி
இதற்கிடையில் தான் வங்கி மேலாளரை கன்னத்தில் அறைந்த சம்பவம் அரங்கேறி அதிர்ச்சி அளித்துள்ளது. இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, முதலமைச்சர் விஜய்யின் எலும்பை உடைப்பேன் என்று பேசிய திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு போலீசார், கயல்விழி அழகிரியை இதுவரை கைது செய்யாதது ஏன்? இவர் பொதுத்துறை வங்கியின் மேலாளரை மிரட்டியுள்ளார். அடித்துள்ளார். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாஜக நாராயணன் திருப்பதி அதிரடி கேள்வி
இதேபோல் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை பற்றி மிகவும் மோசமான வகையில் பேசிய பியூஷ் மனுஷ் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கைது செய்யப்படவில்லை. ஏன்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இந்த பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்துள்ள யூ-டியூபர் சவுக்கு சங்கர், விசாரணைக்காக கயல்விழிக்கு சம்மன் கூட அனுப்பவில்லை. மு.க.அழகிரியின் மகள் என்பதற்காக இவருக்கு மட்டும் சட்டம் வேறொன்றா? நாராயணன் திருப்பதி எழுப்பியது சரியான கேள்வி எனச் சுட்டிக் காட்டியுள்ளார்.
கயல்விழி மீது எஃப்.ஐ.ஆர் போட்டாச்சு
ஒருவேளை தவெகவில் இணைவதற்கான நேரம் கூடிவந்துவிட்டதா? கயல்விழி எதிர்பார்த்த விஷயங்களுக்கு தவெக தலைமை ஓகே சொல்லிவிட்டு, இணைப்பிற்கான நேரம் பார்த்து கொண்டிருக்கிறார்களா? போன்ற கேள்விகளை எழுப்புகின்றனர். இந்த விவகாரத்தில் எஸ்.பி.ஐ தரப்பில் அளிக்கப்பட்டதாக கூறப்படும் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிடுகின்றனர். இதுபற்றி விசாரிக்கையில் சென்னை அடையாறு எஸ்.பி.ஐ வங்கி கிளை மேலாளர் ஹர்ஷீன் சிங் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துவிட்டனர். எனவே விசாரணை, கைது நடவடிக்கை என்னவானது என்ற கேள்வியை தவிர்க்க முடியவில்லை.
Source link
