உலகில் பெரும்பாலான மக்கள் நெரிசல்மிக்க நகரங்களில் வாழ ஆசைப்படும் நிலையில், அமைதியான கிராமப்புற வாழ்க்கையை விரும்புவோருக்கு ஸ்பெயின் நாடு ஒரு அசத்தலான வாய்ப்பை வழங்குகிறது. ஸ்பெயினின் ‘சோரியா’ (Soria) மாகாணத்தில் உள்ள ‘அரெனிலாஸ்’ (Arenillas) என்ற குட்டி கிராமத்தில் தற்போது வெறும் 40 முதல் 45 பேர் மட்டுமே வசித்து வருகின்றனர்.
ஹேப்பி… ஹேப்பி: உலகின் மகிழ்ச்சியான நகரங்கள்; உலகமே அழிஞ்சாலும் இந்த நாடு தான் ஃபர்ஸ்ட் இருக்கும்
இளைஞர்கள் வேலைக்காக நகரங்களுக்குச் சென்றுவிட்டதாலும், முதியவர்கள் மறைந்து வருவதாலும் இந்த கிராமம் காலியாகி அழிந்துபோகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஸ்பெயின் அரசு இதனை ‘எஸ்பானா வசியாதா’ (España vaciada) அதாவது ‘காலியான ஸ்பெயின்’ என்று அழைக்கிறது. இந்த கிராமத்திற்குப் புதிய உயிரோட்டம் தரும் வகையில், வெளிநாட்டினர் மற்றும் குடும்பங்களை அங்கு வந்து குடியேறுமாறு உள்ளாட்சி நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது.
அரெனிலாஸ் கிராமம் வழங்கும் சிறப்பான சலுகைகள்
இலவச நகராட்சி வீடு: அங்குக் குடியேறும் குடும்பங்களுக்கு வாடகை இல்லாத இலவச தங்குமிடம் வழங்கப்படும்.
உறுதியான வேலை வாய்ப்பு: கிராமத்தின் கட்டிடங்கள் மற்றும் உள்கட்டமைப்பைப் பராமரிக்கும் கட்டுமானத் துறை சார்ந்த வேலைகள் வழங்கப்படும்.
கூடுதல் பொறுப்பு: கிராமத்தில் உள்ள சமூக பார்களை நிர்வகிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்படும்.
குடியேறுவதற்கான முக்கிய நிபந்தனைகள்
இந்த வாய்ப்பு வெறும் கோடைகாலச் சுற்றுலாப் பயணிகளுக்கு அல்ல, அங்கு நிரந்தரமாக வாழ விரும்புபவர்களுக்காக மட்டுமே வழங்கப்படுகிறது. ஸ்பெயினில் வசிக்கவும் வேலை செய்யவும் சட்டப்பூர்வ அனுமதி பெற்றிருக்க வேண்டும். பள்ளி செல்லும் வயதுடைய குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
ஆண்டு முழுவதும் அந்த கிராமத்திலேயே தங்கி வாழ வேண்டும். கட்டுமானத் துறை, கட்டடப் பராமரிப்புப் பணிகளில் அனுபவம் உள்ளவர்களுக்கு கூடுதல் முன்னுரிமை உண்டு. பரபரப்பான நகர வாழ்க்கையைத் துறந்து, இயற்கையோடு இயைந்த அமைதியான சூழலில் ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்க விரும்பும் குடும்பங்களுக்கு இந்த ஸ்பெயின் கிராமத்தின் வாய்ப்பு ஒரு நிஜ சினிமா திருப்பம் போல அமைந்துள்ளது.
