இனி ஜப்பான்ல சும்மாலாம் செட்டில் ஆக முடியாது… 30 வருஷ கணக்கு வேணும்; இந்தியர்கள் தலையில் விழுந்த பெரிய இடி

ஜப்பான் நாட்டில் நிரந்தரமாகக் குடியேற விரும்பும் வெளிநாட்டினருக்கு ஒரு முக்கியமான செய்தி. வருகிற அக்டோபர் மாதம் முதல் தனது நிரந்தரக் குடியுரிமைக்கான தகுதி விதிகளைக் கடுமையாக்க ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, குறைந்தபட்ச வருமான வரம்பு மற்றும் ஓய்வூதியப் பங்களிப்பு உட்பட பல தெளிவான, கண்டிப்பான நிபந்தனைகளை அறிமுகப்படுத்த அந்நாட்டின் குடிவரவு சேவைகள் முகவாண்மை (Immigration Services Agency) புதிய வழிகாட்டுதல்களைத் தயாரித்து வருகிறது.

’தி ஒடிஸி’ படம் பாத்தீங்களா? அப்ப இந்த இடத்த டிராவலர்கள் மிஸ் பண்ணவே கூடாது; ஹோமரின் காவிய உலகம்

புதிய விதிகளில் சேர்க்கப்படும் முக்கிய நிபந்தனைகள்

விண்ணப்பதாரர்கள் ஜப்பானிய குடிமக்களின் சராசரி குடும்ப வருமானத்திற்கு இணையான அல்லது அதைவிட அதிகமான வருமானத்தைத் தொடர்ந்து ஈட்ட வேண்டும். எதிர்காலத்தில் அரசு நலத்திட்ட உதவிகளைச் சார்ந்திருக்காமல் தங்களைத் தாங்களே நிர்வகித்துக் கொள்வதை உறுதிசெய்யவே இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

30 வருட ஓய்வூதியத் தகுதி

பொதுவாக, ஜப்பானின் ஊழியர் ஓய்வூதியக் காப்பீட்டு அமைப்பில் (Employees’ Pension Insurance system) 30 ஆண்டுகள் பங்களித்த ஒருவருக்குக் கிடைக்கும் ஓய்வூதியப் பலன்களுக்கு இணையான தகுதியை விண்ணப்பதாரர் பெற்றிருக்க வேண்டும்.

ஜப்பானிய மொழி மற்றும் கலாச்சார அறிவு

ஜப்பானிய மொழியறிவு மற்றும் ஜப்பானிய நிறுவனங்கள், அமைப்பு முறைகள் பற்றிய புரிதல் ஆகியவையும் இனி தகுதி அளவுகோலாக மதிப்பிடப்படும்.

இந்த மாற்றத்திற்கு என்ன காரணம்?

தற்போதுள்ள விதிகளின்படி, விண்ணப்பதாரர்கள் நல்ல நடத்தை மற்றும் சுயசார்பு வாழ்க்கை வாழ்வதற்கான சொத்து அல்லது திறமை கொண்டிருக்க வேண்டும் என்று மட்டுமே உள்ளது. ஆனால், அதற்குத் துல்லியமான வருமான அளவுகோலோ அல்லது தெளிவான வரையறையோ இல்லை. இதனைச் சரிசெய்து, வெளிப்படையான அளவுகோல்களைக் கொண்டுவரவே இந்தத் திருத்தங்கள் செய்யப்படுகின்றன.

மேலும், ஜப்பான் அரசு நாட்டின் மக்கள்தொகை வியூகத்தைக் கருத்தில் கொண்டு, வெளிநாட்டினரை ஏற்பதற்கான அடிப்படை கொள்கையை வகுத்து வருகிறது. இதற்காக வெளிநாட்டினரின் எண்ணிக்கைக்கு இலக்கு நிர்ணயிப்பதா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. ஜப்பானில் நிரந்தரக் குடியுரிமை பெறத் திட்டமிட்டுள்ள வெளிநாட்டினரும் இந்தியர்களும் இனி தங்களின் வருமான ஆவணங்கள், வரி மற்றும் ஓய்வூதியப் பங்களிப்புகளை மிகச் சரியாகப் பராமரிப்பது அவசியமாகும்.

Source link