எங்களை ஏமாத்துறாங்க… சீனா தான் எல்லாத்துக்கும் காரணம்; அடுத்த ஆக்‌ஷனுக்கு ரெடியான டிரம்ப்

அமெரிக்கக் குடிமக்களைக் குறிவைத்து இணையவழி நிதி மோசடிகள், முதலீட்டு ஏமாற்றுகள் போன்ற டிஜிட்டல் குற்றங்களில் ஈடுபடும் வெளிநாட்டினருக்கு அமெரிக்கா புதிய சர்வதேச விசா கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த விதியின் கீழ், குற்றத்தில் ஈடுபடுபவர்கள் மட்டுமின்றி, அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படும்.

பழைய சிக்கலுக்கு எண்ட் கார்டு: இந்த நாட்டுல இந்திய ரூபாயை கொண்டு போலாம்; ஆனா இந்த நோட்ட எடுத்துட்டு போய்டாதீங்க

யார் பாதிக்கப்படுவார்கள்?

இணையவழி முதலீட்டு மோசடி, ஆன்லைன் பாலியல் மிரட்டல் மற்றும் பிற டிஜிட்டல் குற்றங்களில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய நபர்கள்.

குடும்பத்தினருக்கும் தடை

குற்றம் புரிபவர்களின் கணவன், மனைவி, குழந்தைகள் உட்படக் குடும்ப உறுப்பினர்களுக்கும் அமெரிக்க விசா முழுமையாக மறுக்கப்படும்.

சட்டம் 212(ஏ) (3)(சி)

அமெரிக்காவின் குடிவரவு மற்றும் தேசிய சட்டப்பிரிவு  212(ஏ) (3)(சி)-ன் கீழ், நாட்டின் வெளியுறவுக் கொள்கைக்குப் பாதகமாகச் செயல்படுபவர்களுக்கு விசா மறுக்கப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த விதிமுறை குறிப்பிட்ட எந்த ஒரு தனிப்பட்ட நாட்டிற்கும் மட்டும் உரியது அல்ல; உலகளவில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும்.

டிரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை

கடந்த மார்ச் மாதம் அதிபர் டொனால்ட் டிரம்ப் பிறப்பித்த நிர்வாக உத்தரவு அடிப்படையில் இந்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மட்டும் சைபர் குற்றங்களால் அமெரிக்கர்கள் 12.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழந்துள்ளனர்.  “பிக் புட்சரிங்” (Pig Butchering) என்று அழைக்கப்படும் போலி ஆன்லைன் முதலீட்டு மோசடிகளைச் சீனாவைச் சேர்ந்த சர்வதேசக் குற்ற கும்பல்களே அதிகம் இயக்குவதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.  

சிறுவர்கள் மீதான தாக்குதல்

அமெரிக்கச் சிறுவர்களைக் குறிவைத்து வெளிநாடுகளிலிருந்து இயக்கப்படும் ‘செக்ஸ்டார்ஷன்’ மன உளைச்சலையும் மிகப்பெரிய பாதிப்பையும் ஏற்படுத்தி வருவதாகக் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவின் பிற தடைகள்

வெறும் விசா மறுப்போடு நிறுத்தாமல், இந்த சர்வதேசக் குற்ற வலையமைப்புகளை முடக்க அமெரிக்கா பல வழிமுறைகளைக் கையாண்டு வருகிறது. பொருளாதாரத் தடைகள், குற்றவியல் வழக்குகள் மற்றும் சொத்துக்கள் பறிமுதல், குற்றவாளிகளை நாடு கடத்தும் கோரிக்கைகள் , கம்போடியாவின் ‘பிரின்ஸ் குரூப்’ (Prince Group) அமைப்பின் மீதான சமீபத்திய சொத்து முடக்கம் மற்றும் பிட்காயின் பறிமுதல் நடவடிக்கைகள்.  

Source link