‘வதந்தி 2’ வெப் தொடர் அப்டேட்; எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக வேறொரு பிரபல நடிகர்!

அன்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, லைலா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, நாசர் உள்ளிட்ட பலர் நடிப்பில் 2022ஆம் ஆண்டு வெளியான  வெப் சீரிஸ் ‘வதந்தி’. புஷ்கர் – காயத்ரி தயாரித்த இந்த தொடருக்கு சைமன் இசையமைத்திருந்தார். க்ரைம் த்ரில்லர் ஜானரில் ப்ரைம் வீடியோ ஓடிடி தளத்தில் வெளியான இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 

இத்தொடரின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் முதன்மை கதாபாத்திரத்தில் சசிகுமார் நடித்துள்ளார். மேலும் அனாகா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். வால் வாட்சர் பிலிம்ஸ் தயாரித்துள்ள இத்தொடரில் இயக்குநர் புஷ்கர் காயத்ரி கிரியேட்டிவ் தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். 

இந்த நிலையில் இத்தொடரின் ரிலீஸ் தேதி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் வெளியாகியுள்ளது. அதன்படி ப்ரைம் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 7 முதல் ஸ்ட்ரீமாகவுள்ளது. போஸ்டரில் சசிகுமார் போலீஸ் கெட்டப்பில் நிற்கிறார். எஸ்.ஜே.சூர்யாவுக்கு பதிலாக இவர் நடிக்கிறார். முதல் முறையாக அவர் போலீஸாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



Source link