சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவிலில் தீமிதி விழா திங்கள்கிழமை நடைபெற்றது. சுமார் 20 ஆயிரத்திற்கும் மேல் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் அவசர மருத்துவ தேவைகளை கருத்தில் கொண்டு, மனிதநேய ஜனநாயக கட்சி தலைவரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான மு. தமிமுன் அன்சாரி கட்சியின் சார்பில் 3 ஆம்புலன்ஸ்கள் கோயில் வளாகத்தில் சேவைகாக தயார் நிலையில் நிறுத்தப்பட்டன. அதேபோல் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு 8 ஆயிரம் குடிநீர் பாட்டில்களை வழங்கினர்.
திருவிழா முழுவதும் அவசர கால தேவையை கருத்தில் கொண்டு குடிநீர் மற்றும் மருத்துவ உதவிகளை உடனுக்குடன் வழங்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த மனிதநேய சேவைக்காக கோவில் நிர்வாகம் சார்பில் எம்எல்ஏ மற்றும் மனிதநேய ஜனநாயக கட்சியினருக்கு நன்றியை தெரிவித்தனர். இந்நிகழ்வில் சிதம்பரம் நகர் மன்ற துணைத்தலைவர் முத்துகுமரன், நகர்மன்ற உறுப்பினர்கள் கல்பனா, சுதா, மனிதநேய ஜனநாயக கட்சியின் மாணவர் அமைப்பின் மாநில தலைவர் பைசல், கட்சியின் மாவட்ட செயலாளர் ஜாகீர் உசேன், துணை செயலாளர் முகமது ரபீக், பொருளர் இக்பால், நகரச்செயலாளர் சையது புகாரி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
