திடீரென பற்றி எரிந்த லாரி; அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ஓட்டுநர்

நாமக்கல்லில் இருந்து செங்கல் ஏற்றி்க்கொண்டு சிவகங்கை மாவட்டத்தை நோக்கி ஈச்சர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த வேனை சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த ரஞ்சித் குமார் ஓட்டி வந்தார். முசிறி – நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் பாரதிபுரம் புதிய சுங்க சாவடி அருகே வேன் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக வேனின் முன்பகுதியில் இருந்து திடீரென புகை மூட்டம் எழுந்து தீப்பற்றி எரியத் தொடங்கியது.

எகிப்து மன்னர்களின் கல்லறையில் இருந்த லிக்விட் தங்கம்… 3,000 வருஷமா எதும் ஆகலயாம்; இத சாப்பிடுவாங்களா?

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் ரஞ்சித் குமார், உடனடியாக வேனை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு கீழே குதித்தார். இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக எவ்வித காயமுமின்றி உயிர்தப்பினார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த முசிறி தீயணைப்புத் துறையினர் மற்றும் நாமக்கல் தீயணைப்புத் துறையினர், உள்ளூர் பகுதி இளைஞர்கள் லாரியில் எரிந்து கொண்டிருந்த தீயைக் கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மேலும், இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த தொட்டியம் தாசில்தார் லஜபதி ராஜ் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். இந்த தீ விபத்து குறித்து காட்டுப்புத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

க.சண்முகவடிவேல்

Source link